Thursday 30 June 2016

பண்பாடுகளே  இஸ்லாமிய சமூகத்தின் இலக்கணம்



எம் சமூகத்தில் பல வேறுபட்ட சீர்திருத்த வாதிகள்,முஜத்தித்கள் வந்து சென்றாலும் தொழில்நுட்பம்,பரிணாமவளர்ச்சி,நாகரீகம் என பல வளர்ச்சிக்குள் சிக்குண்ட நம் சமூகம் தர்க்கம் செய்வதும்,வாதம் புரிவதுமாய் சமூகம் சந்தைப் படுத்தப் பட்டுள்ளன.



சமகால உலகில் இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு அறைகூவல்களையும் சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இளைய இரத்தங்களின் ஆத்மீக ஒழுக்க வாழ்விற்கு எதிரான கருத்து ரீதியான, ஒழுக்க, பண்பாடு ரீதியான சவால்கள் மிகப் பயங்கரமானவைகளாக உள்ளன.

இஸ்லாமிய சமூகத்தில் ஈமானை சூரையாடுகின்ற, அவர்களுடைய உயர் ஒழுக்க மாண்புகளைத் தகர்த்து எறிகின்ற, இஸ்லாமிய இலட்சியக் கனவுகளைக் கொச்சைப்படுத்துகின்ற பல்வேறு அறைகூவல்களுக்கு நமது சமூகம் ஆளாகின்றார்கள். நவீன கல்விக் கோட்பாடு, நவீன இலக்கியம், தகவல் தொழிநுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள், சினிமா, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகளை இதில் அடையாளப்படுத்தலாம்.


முகம்மது நபி ஸல் அவர்களின் இருண்ட காலங்களில் கூட எங்காவது ஒரு பகுதிக்குள் அல்லது ஒரு நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து விட்டால், மாற்று மதத்தவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் பழக்கம்,பண்பாடு இருந்து வந்தன,அதில் குறிப்பாக மதவழிபாடு,சகோதரத்துவம்,சமஉரிமை,வியாபாரம்,சமூக ஒற்றுமை உள்ளடங்கி இருக்கும், அல் குரான் இவ்வாறு வழி காட்டுகிறது



‘இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.’ (9:6)



மதீனாவில் நபிகள் நாயகம் உருவாக்கிய பண்படை வெளிக்காட்டும் சாசனத்தில் இடம் பெற்ற சில விதிகளைப் பாருங்கள்:

1. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்கள் எமது ஆதரவுக்குரியவர்கள். அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். அவர்களது எதிரிகளுக்கும் உதவ மாட்டோம்.

2. யூதர்கள் அவர்களின் சமயத்தின்படி நடப்பார்கள். முஸ்லிம்கள் அவர்களது சமயத்தின்படி நடப்பார்கள். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கி. பி. 630-இல் நஜ்ரான் நாட்டுக் கிறிஸ்தவர்களுடன் நபிகள் நாயகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகள் வருமாறு:

நஜ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் குடிமக்களின் உயிர், நிலம், உடைமைகள், வணிகம், மதம், வணங்கப்படும் சிலைகள் ஆகிய அனைத்தும் இறைவன் மற்றும் இறைத்தூதரின் பாதுகாப்பில் உள்ளன.



பண்பாடுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் 'உம்மத்து ன் வஸத்' நடு நிலையான சமூகமாக திகழ வேண்டும் என்ற இதிகாசங்களையும் இஸ்லாம் சொல்ல மறக்கவில்லை,பொதுவாக நபி ஸல் அவரகள் பல இன்னல்களுக்கு மத்தியில் மாற்று மத,நாகரிகமற்ற சமூகத்துடன் முகம் கொடுத்து சாணக்கியமாக கையாள்தமை அவர்களின் சாதுரியங்களில் ஒன்ரு எனலாம்.

நாம் செவ்வனே இஸ்லாம் சாந்தி,சமாதானம் பேசுகின்ற மார்க்கம் என குரல் கொடுத்தாலும் இன்றைய சமூக வலயத்தளங்களில் கூட ஒரு பண்பட்ட சமூகம் வளர்ந்திருப்பதை காணமுடிவதில்லை.



அந்த இருண்ட அறியாமை காலங்களில் கூட நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் தூதுவர்களை வைத்துக் கொள்வார்கள்,பொதுவாக ஒரு நாட்டு ஜனாதிபதியாக இருந்தாலும் அவரகள் மென்மையான,பண்பான வார்த்தைகள் மூலம் ஒரு தூதுத்துவ கடிதமொன்றை அனுப்பி வைப்பார்கள்.

''அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையன் பெயர் கொண்டு,ஹபஷா நாட்டின் அரசர் நஜ்ஜாஷி அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து,நேர் வழியை பின்பற்றுகின்றவர்களுக்கு சாந்தி,சமாதானம் உண்டாகட்டும்,பின் நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா என சாட்சி கூறுகிறேன் இன்னும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் உம்மை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன்''



என்ற அழகிய உரைநடை,பண்பான வார்த்தைகளுடன் இஸ்லாத்தை வெளிப்படுத்துகின்ற அழகிய வாசகங்கள் உள்ளடக்கி முறைப்பாடுகளை,அழைப்புகளையம் இடுவார்கள்,ஆக எங்களது செயற்பாடுகள்,நடவடிக்கைகளே நாம் யார் என தீர்மானிக்கும்,வெறுமனே ஒரு அந்நியன் குரல் எழுப்பி விட்டார் என்பதற்காக நாம் கூக்குரலிட்டு கூச்சலிடுவது நாகரீகமற்றது.



‘’ஒரு எறும்பு நபிமார்களில் ஒரு நபிக்கு கடித்ததும் அந்த எறும்பின் கூடையும் (இடம்) எரிக்க உத்தரவிட்டு அவ்வாறே எரிக்கப்பட்டதும் அல்லாஹ் ' ஒரு எறும்பு கடித்ததட்கா அனைத்து கூட்டத்தையும் அழிக்கச் சொன்னீர்' என்றான்’’



எனவே ஒருவர் செய்யும் செயல் ஒட்டுமொத்த  கூட்டத்தையே தீர்மானமெடுக்க முடியாது  அது போலவே எமது பண்பாடு ஒழுக்கம் வெறும் வியாபாரம்,கல்வி,ஆடை,நடத்தைகளில் மாத்திரம் நின்றுவிடாமல் பண்பாடு நம் நாவில் இருக்கவேண்டும்



இன்று மனிதன் தனிமனித சுதந்திரம் என்ற எண்ணக்கருவை விரிவாக்கிக் கொண்டு பகுத்தறிவு வாதத்தையும், பொருள்முதல் வாதத்தையும் மூலமாக் கொண்டு வாழ்கிறான். மனித சிந்தனைக்கூடாக சமூக வாழ்வை அமைக்கிறான். இதனால் சிந்தனை மாற்றத்துடன் அடிக்கடி வாழ்க்கை முறைகளும் மாறகின்றன



மனித நடத்தைகளிலும் பண்பாடுகளிலும் எவ்வித தாக்கத்தையூம் செலுத்தாத அடிப்படை வணக்கங்களை மாத்திரம் பூஜித்துக்கொண்டிருப்பவர்களது நிலைப்பாட்டை இஸ்லாம் மறுக்கிறது,ஆக சமூக ஊடகங்கள் எமக்கு கிடைத்த ஓரு அறப்பணி அதனை சாதுரியமாக கருத்துக்களை பரிமாற பழக்கங்கள்ப,ண்பாடுகள் எம் சமூகத்திடம் வளர வேண்டும்.



With best regards,
Zuhair Ali (MBA,PGD,EDM,GHAFOORI)
Freelance Writer and Socialactivist)
0778191787 KINNIYA

Tuesday 12 April 2016

அரசியல் சந்தையாக மாறிப் போன கிண்ணியா ..!

இஸ்லாத்தில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்படுகின்ற உரிமைகளாகும் அவை எதோ ஒரு அரசாலோ சட்ட மன்றத்தினலோ வழங்கப்பட்டவையல்ல,மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு  காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம்,சர்வாதிகரிகளின் அரசனையும் இவ்வாறு மாற்றப்படகூடியதே !

அவர்களுக்கு ஒத்து வரகக்கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள் இல்லை என்றால் விளக்கி விடுவார்கள் அனால் இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ திருத்தவோ எந்த சட்ட மன்றத்திற்கும்,அரசுக்கும் அறவே உரிமை இல்லை ஏனனில் அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை.

வெற்றுத் தாலில் எழுதி வீண் விளம்பரத்துக்கு மட்டும் பயன் படுத்தப்படும் உதவாக்கரை ஆவனங்கள அல்ல அவை வெளிச்சம் போட்டு காட்டிய பின் நடை முறை வாழ்வில் அமல் படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை அமல் படுத்துவட்கு இசைவாணை இல்லாத வறட்டு கொள்கைகள் அல்ல அவை.

நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவைஅது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்றுசெயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக மையும்சட்டத்தின் கீழ்ப்படிதல்,நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும்சமூகப்பாதுகாப்புசமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக்கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன.

மக்களாட்சியில் பிரதேச மட்டம் ொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின்வாக்குகள் ூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கியபணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும்தலைவர்கள் நேர்மையாகவும்,அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் ெயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும்அத்துடன் தலைவர்கள்அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும்தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம.

பொதுவாக கிண்ணியா  வரலாற்றில் பல அரசியல் வாதிகளும்,தலைவர்களும் வந்தே சென்றனர் என்றாலும் தூர நோக்கு,நீண்ட கால திட்டங்கள்,சமூக நலன்கள் குறைவாகவே காணப்படுகின்றன எனினும் நாம்தான் அவர்களை வளர்த்து விடுகின்றோம் அவர்களாக தவிர  வளர்வதில்லை,அதே சமயம் நாம் அவரகளுக்கு சிந்திக்க அல்லது சமூக சிந்தனை போன்ற அளுத்தக்களை  கொடுப்பதில்லை மாறாக நாம் ஒரு குறிகிய நோக்கங்களுடன் பின்னல் அடி மட்ட தொண்டர்களாக வெறுமனே ஒரு வேலைவாய்ப்பு அல்லது,கொன்றக்ட்  தவிர சுய நல அரசியலாக மாற்றி வைத்திருக்கிறோம் குறைவாக இருப்பதால் தலைவர்களும் அதற்கப்பால் சிந்திப்பதில்லை.


அவர்களிடம் குழுவாக அல்லது சமூக சிவில் கூட்டமாக சென்று பல நிகழ்ச்சி  நிரல்கள்,நீண்ட கால  திட்டங்கள்,மகஜர்கள்,கோரிக்கைகளை முன் வெய்யுங்கள் அப்போதுதன் அவர்களும் சிந்திப்பார்கள் அவர்களையும் அரசியல் விஞ்ஞனம்,அல்லது அரசியல் கொள்கை சம்மந்தமாக படிப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்,தவிர இன்றைய தலைவர்கள் எவ்வாறு என்றால் 'என்னிடம் இரண்டு வேலை வாய்ப்பு இருக்கிறது அதில் ஒன்றை உனக்குத் தருகிறேன் ஆனால் உன் மொத்த குடும்பமும் எனக்கு வாக்களிக்க வேண்டு என்ற ஒரு அரசியல் சந்தையாக மாறி  இருக்கின்றமை வாக்காளர்கள் நாமும் விட்ட தவறுகள்தான் என்பதும் வெளிப்படை.

இஸ்லாமிய அரசியல் யாப்புக்கள்,வரலாறுகளை ஆகக் குறைந்த பச்சம்  நினைவுக்காக இருக்கவேணும் தூண்டுங்கள்,எமக்கு நன்றாக தெரியும் தேர்தல் வந்து விட்டால்தான் உறவுகள்,அண்ணன்,தம்பிகள் நினைவுக்கு வரும் ஆக அந்த தருணத்தை நாம்தான் பயன்படுத்த தவறிவிட்டோம்..!

திருமறை விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவேஇறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள்.

ஆட்சியதிகாரம் என்பதுஇறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால்மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

நாளைய நல்லதொரு கூட்டு சமூகமாக வாழ நாம் நம்மை தயார்படித்ஹிக் கொள்ள வேண்டிய தருனம்தான்  இந்த அரசியல் சந்தை ஆக இதை மலிவாக,இலாபமாக,இலாவகரமாக  பெற்றுக் கொள்ள எத்தனிப்போமே ..!




பலம் நிறைந்த முஸ்லிம் கூட்டமைப்பு !!

உலகெங்கும் வளர்ச்சிப் பாதையை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த இஸ்லாம் ஒரு பலம் கொண்ட,சமூகமாக மாறிக் கொண்டிருக்கும் தருவாயில் பல தரப்பட்ட கோணங்களிலும் எம்மை சாடி தீவிர வாதிகளாகவும் ஒடுக்கி  மடக்கி சித்தெரித்து  காட்டிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடி உலகில் நாம் ஒரு முன்மாதிரி இஸ்லாமிய சமூகக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய பண்பாடு,ஒழுக்கம் என சமூக மேன்பட்டை வளர்க்கின்ற நாம்தான் ஒரு முன்மாதிரி சமூகமாக மாற்று சகோதரர்களுக்கு இருக்க வேண்டும் அனால் இன்று அரசியல் இலபாம்,கோபம் ,காழ்புணர்ச்சி,வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்கவும் இன்றி பிரசேத வாதம்,கட்சி வாதம் பேசிக் கொண்டு,தூற்றிக் கொண்டு இருக்கிறோம் அனால் சகோதர மொழி பேசிகின்றவர்களுக்குள் எந்த விதமான சம்பவங்களோ ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு இந்த தேர்தல் அமையவில்லை 

இஸ்லாமிய சமூகம் விடுதலை பெறுதல் மற்றும் சமூக மாற்றம் எல்லாம் வெறும் இபாதத்துகளில் முழுமையடைந்து மார்க்க வழிமுறைகளை பின்பற்றுவதால் மட்டும் நடந்து விடும் என்ற கற்பனை வழிமுறைகளில் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு உடன்பாடில்லை. அது மனிதர்களின் கடின முயற்சியாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளாலுமே இந்த பூமியில் வாழ முடியும் என்ற நியதிக்கு உட்பட்டது. 

பலம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது, பலவீனம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடு தலைதூக்கிவிடுமேயானால் அந்தச் சமுதாய அமைப்பு அழிந்தே போகும்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னுடைய மரணத்திற்குப் பின் நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு விடாதீர்கள். இன்னும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்

இன்று முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலை, இவர்கள் இவ்வுலகத்திற்கே தேவையற்றவர்கள்-பிரச்சனைக்குரியவர்கள் என்று மற்ற மக்களால் பார்க்கப்படும் நிலை ஏதோ இன்றோ நேற்றோ அல்லது ஒரு சில நாட்களிலோ உருவானது அல்ல.இஸ்லாத்தை என்று முஹம்மது(ஸல்) அவர்கள் புனரமைத்தார்களோ அன்று முதல் இஸ்லாத்தினை அழிக்க இஸ்லாத்தின் பரம வைரிகளால் பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருக்கிறன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கேற்ப தங்களது திட்டங்களை இஸ்லாத்தின் எதிரிகள்புனரமைத்துக் கொண்டுள்ளார்கள்.

மத ஆதிக்கம்,இஸ்லாமிய இயக்கங்கள்,தலைவர்கள் கொண்ட இந்த சிறிய இலங்கை தீவில் நாமே நம்மை வெட்டி,குத்தி முரண் பட்டு கட்சி,கோத்திரம் என்று இன்னும் பல கட்சிகளாக கொள்கைவாதிகளாக பிரிந்து செல்கின்றோம் இதனை அந்நிய சமூகம் வேடிக்கை பார்த்து சிரித்திக் கொள்ளுமளவுக்கு நாம் இருக்கின்றோம் இது ஒரு குழுவையோ அல்லது கோத்திரத்தையோ சாடாது இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சாடும்.

அண்மையில் நடந்த காத்தான்குடி சம்பவங்கள் ஒரு எடுத்துக் காட்டாக அமைகின்றது இத் தேர்தலில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடந்திருக்கவில்லை ஆனால பிற்பாடு ஏதேதோ கேள்விப்படுகிறோம் இது ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லை எமது மத தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,மற்றுமல்லாமல் சகல முஸ்லிம் புத்திஜீவிகளுக்குமான ஒரு பங்காக அமையும்,இது இஸ்லாமிய சூழலின் ஒரு பாரிய விளைவை தோற்றுவிக்கும்.

இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் கலகமும், பெரும் சீரழிவும் ஏற்படும். (ஏக இறைவனை) மறுப்போர்,ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (08:73)
இன்னும் நாம் 50 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது .

Zuhair Ali (Ghafoori,PGD,MBA )
Kinniya-former employee of qatar embassy
778191787

http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/

அதிகார மோகமும் அரசியல் பதவியும் ..!!




உலக வாழ்க்கை  என்னும் மாளிகைக்கு பொருளும்,மதிப்பும் அத்திய அவசியமான இரண்டு தூண்கள் பொருளை உடைமை ஆக்கிக் கொண்டு அதன் மீது உரிமையை நிலை நாட்டும்போது அதை செல்வ நிலை எனக் குறிப்பிடலாம், மனித உள்ளங்களை வசப்படுத்திக் கொண்டு அவற்றின் மீது செலுத்தும்போது அதை பதவி என்று குறிப்பிடலாம் .

பெரும்பாலான தலைவர்களால் , பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது .ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம் ,புகழ் ,செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான தலைவர்களால்  பதவிக்காக ஆசைப் படுகிறார்கள்.இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.

இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.

ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்: நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை (ஏதாவதொரு பகுதிக்கு)ஆட்சிப்பதவியில் நியமனம் செய்யக்கூடாதா? என்று கேட்டேன்.

அதற்கு நபியவர்கள் தங்கள் கரத்தால் என் தோள்பட்டையில் அடித்துவிட்டு ஓ அபூதரே! நிச்சயமாக ஆட்சிப்பதவி என்பது ஓர் அமானிதம் (நம்பிக்கைக்குரிய பொறுப்பு) ஆகும். உலகில் அதற்கு அதிக மதிப்பு இருந்தபோதிலும் கியாமத் நாளில் அது இழிவும், கைசேதமும் ஆகும்; யார் பொறுப்பினை சுமந்து அதன் கடமையை சரிவர நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குத்தவிர. (முஸ்லிம்)

மனிதன் சிறந்த படைப்பாக இருப்பினும் மனிதனின் உள்ளத்தில் பணம், பதவியின் மீதான ஆசை மிக அதிகமாகி விடும்போது அவன் மிருகமாக மாறி விடுகிறான். பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்து விடுவது போல பதவிக்காக பல சதித் திட்டங்களை வகுக்கிறான். இன்றைய நாளிதழ்களை படித்தாலே அதில் பெரும்பகுதி அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் விமர்சிக்கும் செய்திகள் தான் அதிகம் உள்ளது. எல்லாம் பதவிக்காகத் தான். குறிப்பாக ஃபிர்அவ்னாக செயல்படும் , தலைவர்கள அவனது பாசிச கும்பலும் பதவிக்காக செய்யும் தந்திரங்கள் எத்தனையோ,பதவி பறிபோய் விடும் என்ற பயத்தால் பல்லாயிரக்கணக்கான ஆண்குழந்தைகளை கொன்று குவித்த ஃபிர்அவ்ன்

இராக்கில் இருந்து ஒரு குழுவினர் உமர் ரழி அவர்களை சந்திக்க வந்தனர். அதில் அஹ்னஃபும் இருந்தார். அப்போது உமர் ரழி அவர்கள் கடும் கோடை காலத்தில் இடுப்பில் ஆடையை கட்டிக் கொண்டு சதகாவுடைய ஒட்டகத்தின் உடம்பில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தார்கள் மருந்து போடுவதற்கு தோதுவாக ஒட்டகத்தை படுக்க வைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் உதவிக்கு அஹ்னஃபை அழைத்த போது அங்கிருந்த ஒருவர் கேட்டார் அமீருல் முஃமினீன் அவர்களே ! 

இது போன்ற வேலைக்கு பணியாளர்களை ஏவலாம் அல்லவா ? நீங்களே ஏன் சிரமப்படுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு உமர் ரழி அவர்கள் நான் தானே மக்களின் பணியாளன். என்னை விட, மேலும் இந்த அஹ்னஃபையும் விட பணியாளர்கள் யார் ? என்று கூறி, எவர் மக்களின் தலைவராக பொறுப்பேற்றாரோ, அவர் அந்த மக்களின் அடிமை பணியாளர் ஆவார். என்றார்கள்.

மதிப்பு,மரியாதையை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் இருக்க மாட்டார்கள் ,தலைவர்கள்  மக்களின் சமூகத்தின் பணியாளர்களே தவிரே ஆடம்பரம்,அந்தஸ்து,மாளிகைக்காக ஆசைப்படுகின்ற பணக்காரர்கள் அல்லர் ,பதவி மோகம் வருவதற்கான அடிப்படை தன செயலை பிரபால்யப்படுத்த வேண்டும் அல்லது தான் ஒரு முக்கிய புள்ளியாக கருத வேண்டும் என்பதற்காக !

.திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி (ஸல் ) அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள் .ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை , மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை .

அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது , கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும் .மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள் .
பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார் . 

எத்தனை வரலாற்று சான்றுகளும்,இதிகாசங்களும் நாம் சொல்லி கேட்டு இருந்தாலும் சிரியலவேனும் வாழ்வில் எடுத்து நடக்க முயட்சிப்பதுமில்லை,பொதுவாக பதவி,அந்தஸ்து மோகம் கொண்டவன் மக்களோடு நெருங்கி,இரங்கி பேச கவனம் செலுத்த  மாட்டன் அவனுக்கு சுய இலாபம் கிடைக்குமாயின் அதற்கு தஹுந்த தருணம் பார்த்து பேசுவான் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)


Zuhair Ali(Ghafoori,PGD,MBA)

மாசடைந்து வரும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் சூழல் !!

இஸ்லாம் தனி  மனித,குடும்பவியல் ,அரசியல்,சமூகவியல் என்ற எல்லா விதமன மனித இயல்பிற்கு ஏற்ப ஒரு பண்பாடான ஒழுக்கவியல் சார்ந்த வையகம்,முஸ்லிம் உம்மா இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமிய அரசியலை தெளிவாக முழுமையான முறையில் எவர் தனதாக்கி கொள்ளவில்லையோ அவரை ஆதரப்பது கூடாது.

“எவரொருவரை முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்து அதில் அவர் பொடுபோக்காக இருந்து அவர்களின் தேவைகள் மற்றும்  ஏழ்மையை போக்க அக்கறை கொள்ளவில்லையெனில் மறுமை நாளில் அல்லாஹ் இவருடைய விஷயத்தில் கவலையற்றவனாகவும் அவருடைய தேவை மற்றும் ஏழ்மையில் அக்கறை கொள்ளவும் மாட்டான்.”   (அபூதாவூத் 2948)

 இஸ்லாத்தில்,பள்ளிவாயல்களில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்ற வாதங்களை கால காலமாக நாம் விவதிதுக்கொண்டும் கட்சி கட்சியாக பிரிந்து கொண்டும் பிளவு பட்டுக் கொண்டும் இருக்கிறோம் முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் (அலை) அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள். யூஷஉ பின் நூன் (அலை) அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் (அலை) அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர். 

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர். 

கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதுவே எளிதான சான்றாக அமைந்து விடுகின்றன ஆக இஸ்லாம் ஒரு போதும் அரசியலை ஒதுக்கவும் இல்லை ஒடுக்கவும் இல்லை  இஸ்லாம் மேற்கத்திய அரசியல்வாதி கொண்டுள்ள பல தன்மைகளை கண்டிக்கின்றது. அதேபோல் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிப்படையாக கொண்டுள்ள கண்ணோட்டத்தையும் கண்டிக்கின்றது.

இஸ்லாம் ஒரு அரசியல்வாதியை அதனுடைய பிரத்தியேக அடிப்படை மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தன்னலன் மட்டுமே அல்லாமல் இஸ்லாம் தன்சார்பற்ற நிலையை வளர்க்கின்றது, ஒரு குறிக்கோளை அடைய இழிவான யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக உண்மை நிலையையும் வெளிப்படை நிலையையும் மேற்கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு எதை நாடுகிறானோ அதையே தன் சகோதரனுக்கு நாடச் சொல்லி இஸ்லாம் கற்றுத்தருகிறது- மேற்குலகமோ அதிகமாக மற்றவர்களின் நலனை விட தன்னலன் மட்டுமே முக்கியமென கற்றுத்தருகிறது.

‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
இன்று அமேரிக்கா,இஸ்ரேலர்களின் நீணட கால திட்டங்கள்  அடிப்படையில் ஒரு பொம்மையாக நமக்கே தெரியாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பது வெள்ளிடை ,நாம் அரிசயல் பேசக்கூடாது என்றும் அந்நிய மொழி படிக்கக்  கூடாது என்றும்  வரையறை ஆக்கிக் கொண்டுள்ளோம்.

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விழையும் நபர்களிடம் இஸ்லாமிய கொள்கை பற்றிய அடிப்படையான புரிதல் அவர்களின் மனதில் பலவீனமாக இருந்தால், அவர்கள் அரசியல் அமைப்பிலிருந்து திசைமாறவும் சிலசமயங்களில் முற்றிலும் அரசியலை விட்டுச்செல்வதும் எளிதாக இருக்கும். ஆகையால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தங்களை பக்குவப்படுத்தி கொள்ள விடாமுயற்சி செய்யவேண்டும்.

இலங்கை வரலாறு நெடுகிலும் பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்றிந்தலும் நம் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் நாம் தோற்று பொய் விடுகிறோம் என்று சொல்லலாம் இஸ்லாமிய எழுச்சி,வசந்தம்,சிந்தனை தூர நோக்கு என்று பேசிக்கொண்டலும் எம்மிடத்தில் எந்த நீண்ட கால நிகல்ட்சி நிரல் இல்லா சமூகமாக இயங்கிக் கொண்டி இருக்கிறோம்,அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்பது போல நாம் காலம் சென்ற பின் சிந்திக்கும் சமூகமாக மாறி விடக்கூடாது .

சகோதர மொழி பேசுகின்ற சமூகம் அதிலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்களுக்கென பிரதானமாக இரண்டு,மூன்று கட்சிகள்தான் இருக்கின்றன என்றாலும் இறுதியில் ஒரு முடிவுக்குள் சுருண்டு விடுவார்கள் ஆனால சிறுபான்மையாக வாழ்கின்ற நாம் நமக்குள் பல கட்சிகள் ,கோட்பாடுகள் இருந்து செறிந்து பல பிரிவினை வாதத்தை தோற்று விக்கவே செய்கின்றன.

சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான்.
 
நாம் இன்னும் அவர்களுக்கு பின்னல் கோசம் எழுப்பிக்கொண்டும்,கூச்சலிட்டுக் கொண்டும் அடி மட்ட தொண்டர்களாக இல்லாமல் ஒரு இலட்சியப் பாதையை நோக்கிய பயணமாக ஆக்கிக்கொண்டு நாம அரசியல் தலைவர்களிடம் பல நல்ல கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டும் ஒரு தலைவர் இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாடு தெரிந்த ,அரசியல் இராஜ தந்திரமுள்ள தூர நோக்குடன் சிந்தின்க்கின்ர தலைவர் வேண்டும் என்றும்.

‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (17:80)

வெறும் குறுகிய   மனப்பக்குவத்துடன் சுயநல அரசியல் செய்தால் நம் முஸ்லிம் சமூகம் மற்றுமல்ல தலைவர்களும் குட்டிச் சுவருக்குள் அடை  பட்டுவிடுவோம் தூர நோக்குடன் எதிர் கால சந்ததியினர் நலன் கருதி ஒரு நல்ல முஸ்லிம்களின் அரசியல் சூழலை உண்டாக்கும் கடப்பாடு தலைவர்களுக்கு மாத்திரமல்ல நமக்குத்தான் பலம் இருக்கிறது ! 

Zuhair Ali(Ghafoori,PGD,MBA)

இலங்கையின் இஸ்லாமிய கல்வியலும் கல்லூரிகளும் !!!



ஒரு சுதந்திரமான கல்வி மரபில்
ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல்மெய்யியல்தகவல் தொழில்நுட்பம்,மொழியியல்உயிரியல்சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும். 

வானியற்பியல்சட்டம்விலங்கியல்போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு.

வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள்நூல்நிலையங்கள்போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்படஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.

அறிவின் மூலம் அன்பு” என்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படு கின்றது. அணிலின் மீது அன்புநண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப் பப்படுகின்றது. அணில் பிள்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாதுவான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத் தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்துத் தருவதன் வாயிலாக வலியுறுத்தப் படுகின்றது.

இஸ்லாமிய கல்வியலும்  வெறுமனே குர்ஆன் ,ஹதீத் கலை கற்பதில் முடிவுறவில்லை அது உளவியல்,வானவியல்,வைத்தியம்,யூனானி,வியாபாரம்,விஞ்ஞான இஸ்லாம் போன்ற எல்லா துறைகளையும் காலடி வைத்திருந்தது ஆனால் இன்று எல்லாம் நவீனம் என்ற போர்வைக்குள் சிக்கிக் கொண்டன.

அரபுக் கல்லூரிகள் ஆறு அல்லது  ஏளு வருட கற்கை நெறியைக் கொண்ட ஒரு இஸ்லாமிய ஷரீஅ அடிப்படையிலான பாடத்திட்டமாகும் இன்று இது போன்ற கல்லூரிகள் எல்லா மூளை முடுக்கிலும் விரிந்து செறிந்து கிடக்கின்றன.

பெயர் சொல்லி பிரபலமான ஒரு சில சமூக,விரிந்த சிந்தனை கொண்ட அரபுக் கல்லூரிகள்  இருக்கவே செய்தாலும் அவை வெவ்வேறு பாடத் திட்டங்களை கொண்டுள்ளமை எமக்கு பெரும் வருத்ததத்தையும்,இன்றைய உலமாக்கள் எதிர் கொல்லும் பிரச்சினைக்களைப் பார்த்தால் வேதனையே.எது எவ்வாறாக இருந்தாலும் வருடத்த்துக்கு வருடம் பல ஆயிரக்கணக்கான உலமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர் அது உள்ளமயில் மகிழ்ச்சியான  எம் இச் சிறிய தீவில் பாரிய பங்களிப்பை செய்யும் என்பதில் ஐய்யமுமில்லை.

அரபுக் கல்லூரியில் பயில்கின்ற காலங்களில் சொல்வார்கள் 'நீ இஸ்லாம் படிக்கின்றாய் உன்னிடம் இஸ்லாம் பற்றித்தான் இந்த சமூகம் கேள்வி  கேட்கும்என்று ஆனாலும் அன்று ஒரு கோணத்தில் மத்திரம இருக்கவில்லை ஆங்கிலம்,சிங்களம்,தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் இந்த பிற்போக்கு  சிந்தனை கொண்ட சமூகத்தில் லெப்பை,பிற்போக்கு சிந்தனை வாதி, அடிப்படைவாதி,கொள்கைவாதி   என்ற நார்களை கழற்றி எரிய வேண்டும் என்ற அவாவுடன் இருந்தாலும்,மலரோடு சேர்ந்த நாறும் மனக்கும் என்பது போல் இன்னும் இந்த சமூகம் ஒற்றைக் கண்ணால் பார்க்கமளுமில்லை.

அரபு பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை, அடிப்படைவாதி,கொள்கைவாதி  (5)வருடங்களாக சுருக்கி ஒரு மாணவன் வெளியாகும்போது குறைந்த பச்சம் வெளி வாரி பட்டதரிக்கான பதிவு செய்து இருக்க வேண்டும் ,இன்று எத்தனையோ இந்திய பல்கலைக்கல்கங்கள் வெறும் க .பொ .சா பெறுபேறு உள்ளவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்கலாம் என்ற எளிய முறையை அறிமுகம் செய்திருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சி,குடும்ப சுமை,நெருக்கடியான உலகம்,மன உளைச்சல் போன்ற இன்னோரன்ன தேவைப்பாடுகள் ஒரு சரா சரி மனிதனுக்கு மட்டுமல்ல எம்மைப் போன்ற சமூகத்தில் நானும் ஒரு நல்ல   மௌலவி என்று முன்னோட்டம் காட்டுவதட்குள் ஜீவிதம் மடுத்துவிடுகின்றன .
அல்லது இந்த 7 வருட கற்கை நெறி உலக தரம் வாய்ந்த கல்லூரிகளில் (FUIW) அல்லது தேசிய பயிலுனர் மட்ட (NAITA) இலங்கை தொழில் பயிற்ச்சி அதிகார சபை (VTA) பதிவு செய்யப் படல் வேண்டும் அது உயர் கல்வி மற்றும் உள்நாட்டு வெளி நாடுகளில் தொழில் பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தரம் கொண்ட சான்றிதல் வழங்க வேண்டும்.

நாம் அன்று விளக்கு வெளிச்சத்தில் படித்தோம்,பென்சில் மூலம் எழுதினோம் என்ற பிற்போக்கு சிந்தைனை சித்தர்தங்களை களைந்து எரிந்து விட்டு புது யுகம் படைக்க எம் மூத்த உலமாக்கள் முன் வர வேண்டும்.

Zuhair Ali (Ghafoori,PGD,MBA)

குடும்பவியல் வாழ்வில் பெண்களின் கண்கள் !!


குடும்ப சுமை ஒருபோதும் ஒரு தனி மனிதன் மீது சுமத்தப் படக்கூடாது ஒரு தனி மனிதன் இன்னொரு மனிதனின் உதவியை தேடி நிற்கின்றான் குடும்ப சுமை என்பது ஒரு தாய்க்கு மாத்திரம் உண்டானதல்ல ஆண்கள் பெண்களை நிா்வகிக்கின்றவா்கள் என்பது அவா்களை கட்டுப்படுத்தல் மாத்திரமல்ல !
பொதுவாக பெண்களுக்கு போாில் கலந்து கொள்ளல்,கூட்டு தொழுகையில் கலந்து கொள்ளல் ,ஜனாஸா தொழகையில் கலந்து கொள்ளல் போன்ற இன்னோறன்ன பொது வணக்கங்களில் நன்மை பெற்றுக் கொள்ள சந்தா்ப்பம் கிடைப்பதில்லை
முஹம்மது ஸல் அவா்களிடம் இது பற்றி கேட்டபோது இதற்கான ஈடு அவா்கள் வீட்டில் செய்யும் பணிவிடை ,சொத்து ,மானம் போன்றவற்றை பாதுகாத்தல் என்பன சமமாக்கின்றன என்றாா்கள்
இன்றைய கால கட்டம் சமஉாிமை என்ற போில் பல மன நோய்களை உண்டாக்கி வாக்கு வாதம் ,மாியாதை குறைவாக பேசுதல் ,ஆண் செய்வதற்கு ஒப்பாக செய்ய வேண்டும் என்ற ஆணவம் என் பறந்திருக்கின்றன இஸ்லாமிய குடும்பவியல் வரலாறு நெடுகிலும் பெண்களின் மகத்தான பங்களிப்பு இன்றியமையதவை
பெண்கள் வீட்டின் கண்கள் அவா்கள் வீட்டு கணக்கியல் ,வருமான ,வீட்டு நிருவாக, பிள்ளைகள் பராமாிப்பு, சமையல் என பல்துறைகளில் பாரம்பாியமானவா்கள் ஒரு ஆண் இருவது வயதை அடைந்ததிலிருந்து தங்கை கல்யாணம் ,பெற்றோா் பராமரிப்பு ,திருமண நெருக்கடி ,மனைவி, பிள்ளைகள் என தனது வாழ் நாளில் மூன்றில் இரண்டு பகுதியை குடும்ப சுமைகளை சுமந்து உடல் ,உள ரீதியிலான மன உலைச்சல் கவலை துன்பங்களை அனுபவிக்கின்றான்

சமுதாய எழுச்சியில் பெண்களின் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய சங்கமிப்பை ஏற்படுத்திக் கொண்டதாக சரித்திரமே இல்லை. இதனை உலக வரலாறுகள் நிரூபித்துள்ளன. எனினும் தந்தை வழி சமூக அமைப்பு என்று கூறப்படும் கருத்தியலின் அடிப்படையில் ஆணாதிக்க தன்மை மேலோங்கியுள்ள நிலையில் பெண்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு உள்வாங்கப்படுகின்றன என்பதும் சமூக மட்டத்தில் அவர்களது தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


நெருக்கடி,பொருளாதார வளர்ச்சி,நவ நாகரிகம்,தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய  உலகம் மனிதனை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டும் கலாநிதிப் பட்டம் பெற வேண்டும்mதொழில் சார் கற்கை நெறியினை படிக்க வேண்டும் என்ற மன ரீதியான உளைச்சல் நெருக்கடிக்குள் ஒருவன் தள்ளப் படுகின்றான் இதில் கணவனும் மனைவியும் பனி புரிந்தால்தான் வாழ்க்கை  சக்கரத்தை சுழற்ற முடியும் எனறகிவிட்டது

ஆக பெண்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் ஏன் எனில் அரு ஆண் சமூக அந்தஸ்து பெற வேண்டும்,தலை நிமிர்ந்து வாழ வேண்டும்,என்ற சமூகப் பிராணியாக பறக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பினும் பொருளாதார மற்றும் அந்தஸ்து போன்ற தேவைகளை போதுமாக்கி அன்றாட சராசரி வாழ்வை கடைபிடிக்க வேண்டும்,ஆண்களுக்கான மன அழுத்தங்களை கொடுக்கதிருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அமைதி பெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

ஆக பெண்கள் குடும்பயில் சாா்ந்த எல்லா சுமையிலும் ஒரு பங்குதாரா் என்பது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஒரு வீட்டு நிருவாகியாக இருந்தால் நிச்சயம் ஒரு குடும்பம் மன்னராட்சியாகும்

இவை காலப் போக்கில் மன ரீதியான தாக்கம் அழுத்தம் ஏற்பட்டு குடும்பவியல் கட்டிடத்தை உடைத்து விடும் மாத்திரமன்றி இன்று விவாகரத்து ஏற்பட இதுவும் ஒரு முக்கிய சமூகக் காரணியாக அமைந்து விடும் என்பதும் தெளிவு,ஆக நாம் இஸ்லாம் எங்கே இருக்கின்றது என்பதை தேடித் போகாமல் இஸ்லாமிய சூழலை நம் வீட்டிலிருந்தே உருவாக்கப்படல் வேண்டும் .

நிச்சயமாக பெண் விழா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள்.அவள் (உம்) பாதையில் முற்றிலும் நேர்படமாட்டாள். அவளின் கோணல் உள்ள நிலையில் சுகம் பெறுவதாக இருந்தால் சுகம் பெற்றுக்கொள்ளலாம்.நீர் அவளை நேர் படுத்த முயன்றால் அவளை முறித்து விடுவீர்.அவளை முறித்து விடுவதென்பது தலாக் (மணமுறிவு) ஆகும்.அதுவரை நீர் செல்ல வேண்டாம்.என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)




With best regards,
Zuhair Ali (MBA,PGD,EDM,Ghafoori)
Social Activist & Freelancewriter
Kinniya 778191787/758800989