Tuesday, 12 April 2016

குடும்பவியல் வாழ்வில் பெண்களின் கண்கள் !!


குடும்ப சுமை ஒருபோதும் ஒரு தனி மனிதன் மீது சுமத்தப் படக்கூடாது ஒரு தனி மனிதன் இன்னொரு மனிதனின் உதவியை தேடி நிற்கின்றான் குடும்ப சுமை என்பது ஒரு தாய்க்கு மாத்திரம் உண்டானதல்ல ஆண்கள் பெண்களை நிா்வகிக்கின்றவா்கள் என்பது அவா்களை கட்டுப்படுத்தல் மாத்திரமல்ல !
பொதுவாக பெண்களுக்கு போாில் கலந்து கொள்ளல்,கூட்டு தொழுகையில் கலந்து கொள்ளல் ,ஜனாஸா தொழகையில் கலந்து கொள்ளல் போன்ற இன்னோறன்ன பொது வணக்கங்களில் நன்மை பெற்றுக் கொள்ள சந்தா்ப்பம் கிடைப்பதில்லை
முஹம்மது ஸல் அவா்களிடம் இது பற்றி கேட்டபோது இதற்கான ஈடு அவா்கள் வீட்டில் செய்யும் பணிவிடை ,சொத்து ,மானம் போன்றவற்றை பாதுகாத்தல் என்பன சமமாக்கின்றன என்றாா்கள்
இன்றைய கால கட்டம் சமஉாிமை என்ற போில் பல மன நோய்களை உண்டாக்கி வாக்கு வாதம் ,மாியாதை குறைவாக பேசுதல் ,ஆண் செய்வதற்கு ஒப்பாக செய்ய வேண்டும் என்ற ஆணவம் என் பறந்திருக்கின்றன இஸ்லாமிய குடும்பவியல் வரலாறு நெடுகிலும் பெண்களின் மகத்தான பங்களிப்பு இன்றியமையதவை
பெண்கள் வீட்டின் கண்கள் அவா்கள் வீட்டு கணக்கியல் ,வருமான ,வீட்டு நிருவாக, பிள்ளைகள் பராமாிப்பு, சமையல் என பல்துறைகளில் பாரம்பாியமானவா்கள் ஒரு ஆண் இருவது வயதை அடைந்ததிலிருந்து தங்கை கல்யாணம் ,பெற்றோா் பராமரிப்பு ,திருமண நெருக்கடி ,மனைவி, பிள்ளைகள் என தனது வாழ் நாளில் மூன்றில் இரண்டு பகுதியை குடும்ப சுமைகளை சுமந்து உடல் ,உள ரீதியிலான மன உலைச்சல் கவலை துன்பங்களை அனுபவிக்கின்றான்

சமுதாய எழுச்சியில் பெண்களின் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய சங்கமிப்பை ஏற்படுத்திக் கொண்டதாக சரித்திரமே இல்லை. இதனை உலக வரலாறுகள் நிரூபித்துள்ளன. எனினும் தந்தை வழி சமூக அமைப்பு என்று கூறப்படும் கருத்தியலின் அடிப்படையில் ஆணாதிக்க தன்மை மேலோங்கியுள்ள நிலையில் பெண்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு உள்வாங்கப்படுகின்றன என்பதும் சமூக மட்டத்தில் அவர்களது தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


நெருக்கடி,பொருளாதார வளர்ச்சி,நவ நாகரிகம்,தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய  உலகம் மனிதனை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டும் கலாநிதிப் பட்டம் பெற வேண்டும்mதொழில் சார் கற்கை நெறியினை படிக்க வேண்டும் என்ற மன ரீதியான உளைச்சல் நெருக்கடிக்குள் ஒருவன் தள்ளப் படுகின்றான் இதில் கணவனும் மனைவியும் பனி புரிந்தால்தான் வாழ்க்கை  சக்கரத்தை சுழற்ற முடியும் எனறகிவிட்டது

ஆக பெண்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் ஏன் எனில் அரு ஆண் சமூக அந்தஸ்து பெற வேண்டும்,தலை நிமிர்ந்து வாழ வேண்டும்,என்ற சமூகப் பிராணியாக பறக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பினும் பொருளாதார மற்றும் அந்தஸ்து போன்ற தேவைகளை போதுமாக்கி அன்றாட சராசரி வாழ்வை கடைபிடிக்க வேண்டும்,ஆண்களுக்கான மன அழுத்தங்களை கொடுக்கதிருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அமைதி பெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

ஆக பெண்கள் குடும்பயில் சாா்ந்த எல்லா சுமையிலும் ஒரு பங்குதாரா் என்பது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஒரு வீட்டு நிருவாகியாக இருந்தால் நிச்சயம் ஒரு குடும்பம் மன்னராட்சியாகும்

இவை காலப் போக்கில் மன ரீதியான தாக்கம் அழுத்தம் ஏற்பட்டு குடும்பவியல் கட்டிடத்தை உடைத்து விடும் மாத்திரமன்றி இன்று விவாகரத்து ஏற்பட இதுவும் ஒரு முக்கிய சமூகக் காரணியாக அமைந்து விடும் என்பதும் தெளிவு,ஆக நாம் இஸ்லாம் எங்கே இருக்கின்றது என்பதை தேடித் போகாமல் இஸ்லாமிய சூழலை நம் வீட்டிலிருந்தே உருவாக்கப்படல் வேண்டும் .

நிச்சயமாக பெண் விழா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள்.அவள் (உம்) பாதையில் முற்றிலும் நேர்படமாட்டாள். அவளின் கோணல் உள்ள நிலையில் சுகம் பெறுவதாக இருந்தால் சுகம் பெற்றுக்கொள்ளலாம்.நீர் அவளை நேர் படுத்த முயன்றால் அவளை முறித்து விடுவீர்.அவளை முறித்து விடுவதென்பது தலாக் (மணமுறிவு) ஆகும்.அதுவரை நீர் செல்ல வேண்டாம்.என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)




With best regards,
Zuhair Ali (MBA,PGD,EDM,Ghafoori)
Social Activist & Freelancewriter
Kinniya 778191787/758800989

No comments:

Post a Comment