Tuesday 9 December 2014


ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்..!! 

இஸ்லாத்தில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்படுகின்ற உரிமைகளாகும் அவை எதோ ஒரு அரசாலோ சட்ட மன்றத்தினலோ வழங்கப்பட்டவையல்ல,மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு  காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம்,சர்வாதிகரிகளின் அரசனையும் இவ்வாறு மாற்றப்படகூடியதே !

அவர்களுக்கு ஒத்து வரகக்கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள் இல்லை என்றால் விளக்கி விடுவார்கள் அனால் இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ திருத்தவோ எந்த சட்ட மன்றத்திற்கும்,அரசுக்கும் அறவே உரிமை இல்லை ஏனனில் அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை.

வெற்றுத் தாலில் எழுதி வீண் விளம்பரத்துக்கு மட்டும் பயன் படுத்தப்படும் உதவாக்கரை ஆவனங்கள அல்ல அவை வெளிச்சம் போட்டு காட்டிய பின் நடை முறை வாழ்வில் அமல் படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை அமல் படுத்துவட்கு இசைவாணை இல்லாத வறட்டு கொள்கைகள் அல்ல அவை.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான் (அல் குரான்)

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை மனிதனுக்கு வழங்கப்பட்ட எல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே..! அடைக்க்கலாம்க அளிக்கப்பட அதிகாரமே ஆகும்,இத்தகைய அதிகர்ணகளை பெற்றவர் மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக சாட்சியளிக்க வேண்டும் அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்த அபூ பக்கர் ரலி அவர்கள் அரசாட்சியின் பொது முதல் உரையில் இவ்வாறு ''நன் நல்லது செய்தல் என்னோடு ஒத்துழையுங்கள் தவறு செய்தல் என்னைத் திருத்துங்கள் இறைவனின் இறை தூதரின் ஆணையகளை நன் நிறைவேற்றும் வரை எனக்கு கீழ் படியுங்கள் நன் வலி தவறினால் எனக்கு கீழ் படிய வேண்டாம்.

இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படுகின்ற இஸ்லாமியச் சட்டங்களுக்கினங்க நிர்வகிக்கப் படுகின்ற பகுதிகள் இஸ்லாமிய அரசு (தாருல் இஸ்லாம்) எனப் படும் அப் பகுதி வாழ்கின்ற மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருந்தாலும் அல்லது அவர்களுள் சிலர் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படாத இஸ்லாமிய சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்படாத பகுதிகள் வேற்றரசு (தாருல் ஹர்ப் ) எனக் கருதப் படும் அங்கு வாழும் மக்கள் எம்மதத்தை சர்ந்த்தவராக இருந்தாலும் சரியே.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.

குடிமக்களின் பேச்சு மற்றும் சுதந்திரத்திற்கு இஸ்லாம் முழு உத்தரவாதம் அளிக்கிறது அனால் ஒரு நிபந்தனை,ஒழுக்க மேம்பாட்டுக்கு வாய்மை பரவுதலுக்கு துணையாக அது அமைய வேண்டும் கொடுங்கோன்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலகது.

அரசின் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனினும் இலங்கை சுதந்திரம் காலமுதல் இடம்பெற்ற தேர்தல்கள் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது முதல் வருடங்கள் தனிக் கட்சி ஆதிக்கம் பெற்ற கள்ளப்பகுதியாகும் (UNP) அடுத்த வருடங்கள் (SLFP) செல்வாக்கு பெற்ற காலமாகும்.

என்றாலும் காலப்போக்கில் ஒரு கட்சி தனியாக வெற்றி கொள்ள முடியாத ஒரு நிர்பந்தம் ஏற்பட்டு பெரும்பான்மை கட்சியினர் சிறுபான்மை கட்சியின் கூட்டமைப்பு தேவைப் பட்டது,அதிலும் விசேடமாக எமது முஸ்லிம் கட்சிகள் பேரம் பேசும் கட்சிகளாக காணப்பட்டு வந்தாலும், சமகால அரசியல் சதுரங்கம் ஒரு விளையாட்டும்,சூதுமாக ஆகிக்கொண்டு போவதை எம்மால் கண்காணிக்க முடிகின்றது மாத்திரமன்றி இது சிறு பன்மை முஸ்லிம்களாகிய எம் வாக்கு வங்கிகள் பெரும் பன்மை கட்சிகளுக்கு செல்ல இருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை.

என்றபோதிலும் நாம் ஒரு அந்நிய நாட்டில் சிருபன்மைகைய வாழ்வதனால் இஸ்லாமிய அரசியலோ,ஆட்சியோ செய்ய முடியாது மொத்தத்தில் நாம் சக்தி,புரட்சி,சமூக விடுதலை போன்ற இன்னோரன்ன வாய்ப்புகளையும்,சந்தர்ப்பங்களையும் நழுவ விட்டு வருகின்றோம்.

ஆக எம் சமூகம் இனி ஒரு போதும் கட்சிக்காக அல்லது கட்சி முடிவுக்காக எதிர்  பார்த்து நிற்கும் என்பது அசாத்தியமே, வேற்றரசுடன் இஸ்லாமிய அரசு ஓர் உடன் படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளுமாயின் அதனை முறைப்படி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஏமாற்றுதலும் நம்பிக்கை கேடு செய்தலும் இஸ்லாத்தில் இடமில்லை, ‘ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி’என முஸ்லிம் சமூகத்தின் வரலாறு வெறும் ஓட்டைப் படகாக பயணிக்க இனிதும் வேண்டுமா என்ற கேள்வி ஒவ்வொரு முஸ்லிமும் கேட்ட வண்ணமே இருக்கின்றான்.


http://madawalanews.com/48654
http://www.sonakar.com/?p=33063
http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/

Sunday 3 August 2014

முதுகெலும்புள்ள அராபிய தலைகள் எப்போது கண் திறக்குமோ...?

யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயபிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள்புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பதுஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

இஸ்ரேல் -அல்லாஹ் இவர்களுக்கென்றே ஒரு சூராவை அருளியும் அவர்களை பல இடங்களில் புகழ்ந்தும் பேசி இருக்கிறான் 
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும்உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.(02:47)

நபி (ஸல்) அவர்களும் ஸஹாபிகளும் குறுகிய எல்லைக்குள் அடக்கு முறைக்கு உட்பட்டு தப்பிச்செல்ல இன்னோர் இடம் தேடும் நிலையில் அல்லாஹ் இஸ்ரா என்ற அற்புதப் பயணத்தின் மூலம் நபியவர்களை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்று நபிமார்களுக்கெல்லாம் இமாமாக நின்று தொழுகை நடத்தும் அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய நிகழ்வில் நாம் பெறும் படிப்பினைகள் ஏராளம். 

பனூ இஸ்ரேலர்கள் -யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர்இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய‌ யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள்என்றழைக்கப்படுகின்றனர்கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரவேலர் கி.மு.1871ம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.

1946 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம்.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்டசதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு அதன் ஒரு பகுதி வந்தேறிகளான யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட தாக்குதல் மூலம் பாலஸ்தீனின் பெரும்பான்மைஇடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90%அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இன்று மேற்குக்கரையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பத்தாஹ் கட்சியின் அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் எந்த ஐநா சபைபாலஸ்தீனத்தை திருடி இஸ்ரேல என்ற ஆக்கிரமிப்பு தேசத்தை உருவாக்கியது 

மேலும் இஸ்ரேல ஆக்கிரமிப்பை செய்யும் போதெலாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேலை பாதுகாத்ததோ அந்த அமைப்பில் சுதந்திர பாலஸ்தீனம் என்ற ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்வழக்கம் போல அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை காட்டிவருகிறது.இதில் அபாஸ் கோருவது ஒன்றும் முழுமையான பாலஸ்தீனத்தை அல்ல .மாறாக 1967 ஆம் ஆண்டிற்குபிறகு அதாவது 1967 ஆண்டிற்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிட்ட பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சொந்தம்.1967 ஆம் ஆண்டிற்கு பின் மீதம் இருக்கும் பகுதிகள் பகுதிகள் பாலச்டீநியர்களுக்குசொந்தம்.மீதமுள்ள பகுதி என்பது வெறும் 20% இடங்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு சொந்தம் என்ற கோரிக்கையை அப்பாஸ் ஐநா(நைனா)சபையில் விடுத்துள்ளார்.இது எந்த வகையிலும்பலஸ்தீனத்திற்கு பலனை தரப்போவதில்லை மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.அப்பாஸின் இக்கோரிக்கையை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன சுதந்திரபோராட்ட குழுக்கள் நிராகரித்து விட்டனர்.பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் எவருமே இதைப் போன்ற அடிமைத்தனத்தை விரும்பவே மாட்டன்.

வரலாறு தெரிந்த எவரும் இஸ்ரேலை ஆதரிக்கவே மாட்டன்.ஏனெறால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்து பலஸ்தீனில் உள்ள பூர்விக குடிமக்களை நாட்டை விட்டுவெளியேற்றி அல்லது அவர்கள் கொன்று குவித்து அந்த நாட்டில் ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கிய வந்தேறிகளான யூதர்கள் இஸ்ரேல என்ற நாட்டை உருவாக்கினர் இன்றுவரைபாலஸ்தீனர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இஸ்ரேலை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் காப்பாற்றி வருகிறது.தனது சொந்த நாட்டிற்காக போராடுபவர்களைதீவிரவாதிகள் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறினால் அதை எப்படி ஏற்க்கமுடியும் அப்படி ஏற்றுக்கொண்டால் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற போராடிய போராளிகளானதிப்பு சுல்தான் சுபாஸ் சந்திர போஸ்,பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நாம் தீவிரவாதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.எனேற்றால் இவர்களை அப்போதையவெள்ளை அரசு தீவிரவாதிகள் என்றுதான் அழைத்தது.பயங்கர வாதமும் ஏகடியபத்தியமும் என்றும் நிலைத்ததாக வரலாறே கிடையாது.இதை இஸ்ரேலிற்கு காலம் உணர்த்தும்.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போதுஅங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர்இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்பிரெஞ்சுஆங்கிலம்அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர்இந்த அலியா-க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாகஇருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள்நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தனஇது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும்நிலங்களை வாங்கியிருந்தனர்இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும்மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்ததுஇரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில்மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர்ஒப்புதலின்றி (சட்டமுரணாகஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர்.இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.

1936 முதல் 1939 வரை அரபியர் யூதர்களுக்கு எதிராக‌ கிளர்ச்சி செய்தனர்அரபியர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து பிரிட்டன் பாலஸ்தீனத்திற்கு குடியேறிக் கொண்டிருந்த‌ யூதர்களின்எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்ததுஇதையடுத்து பெரும்பாலான யூதர்களை சட்டத்திற்கு விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட வேண்டியதாயிற்றுஇதனால் மேலும்பதட்டம் அதிகரித்தது1933 முதல் 1939 வரை ஐந்தாவது அலியா கால கட்டத்தில் யூதர்கள் நாஜிக் கட்சியினரின் அட்டகாசத்தால் ஜெர்மனியிலிருந்து குடியேறினர்1941ல் லேஹி என்ற ரகசியஅமைப்பு அமைக்கப்பட்டதுபல்மாக் எனப்படும் அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது1944ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக யூத படைப் பிரிவு அமைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு அன்றைய உலக வல்லரசு என்று அழைத்துக் கொள்ளப்பட்ட நாடுகளால் ஐரோப்பாவில் இருந்து வந்தேறிகளாக வந்த யூதர்களுக்காக பலஸ்தீன மண்ணின் பூர்விககுடிமக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டி விட்டு அவர்களின் இடம் வந்தேறிகளான யூதர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.இது தான் அன்றைய உலக வல்லரசுகளபலஸ்தீன மக்களுக்கு செய்த முதல் துரோகம்.அந்த துரோகத்தில் பலஸ்தீன மக்களின் இரத்தத்தில் பிறந்த நாடுதான் இன்று அழைக்கப்படும் இஸ்ரேல.அன்று இஸ்ரேல் என்ற நாட்டிற்கு ஐநாமூலம் பாலஸ்தீனர்களிடம் இருந்து பிடுங்கி கொடுக்கப் பட்ட இடம் மிகவும் குறைவு அதுவும் அவர்களின் மக்கள் தொகையை கணக்கிடும் போது மிகவும் அதிகம்.ஆனால் இன்று வந்தேறியூதர்கள் பாலஸ்தீனர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 80% நிலங்களை அபகரித்து உள்ளனர்.

இதைப் பற்றி எல்லாம் உலக நாடுகளோ அல்லது மீடியாக்களோ ஒரு செய்தி கூட வெளியிடுவதில்லை.ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேலின் கொடூர தாக்குதலின் மூலம் தினம் தினம்கொல்லப்படும் பாலஸ்தீனர்களை பாதுகாக்கவும் தங்கள் நாட்டை இஸ்ரேல என்ற பயங்கரவாத நாட்டிடம் இருந்து பாதுகாக்கவும் போராடினால் அவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்.இது தான்நீதியோ.இதை தீவிரவாதம் என்று கூறினால் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய சுபாஸ் மற்றும் பகத் சிங்கை தீவிரவாதிகள் என்று தான் நாம் அழைக்க வேண்டும்எனெற்றால் அன்றைய வெள்ளை அரசு இவர்களை பயங்கர வாதிகள் என்று தான் அழைத்தது.நாம் அதை ஏற்கவில்லை.நம்முடைய்ய நாட்டிற்காக அன்று போராடிய நமது சுதந்திர போராட்டவீரர்கள் போலத்தான் பாலஸ்தீனர்களும்.சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.இடம் மொழி வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சுதந்திரத்தின் நோக்கமே அடிமைத்தனத்தைஎதிர்ப்பது தான்.

பாலஸ்தீன் பற்றிய நெல்சன் மண்டேலாவின் கருத்து :
பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலாபாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைஅவர்களின்துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக்கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்ததுஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின்துயரம் இன்றளவும் தொடர்கிறது.பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

பாலஸ்தீன வரலாறு - இஸ்ரேல் பற்றிய காந்தியின் கருத்து இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிட மிருந்து பெறப் பெரிதும் முயன்றனர்.அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர்‘‘யூதர்கள் பாலான எனது பரிவுநீதியைப் பார்ப்பதில் எனது கண்களைமறைத்துவிடவில்லைதங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லைமற்ற மக்களைப் போலவே அவர்களும் ஏன் தாங்கள்பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?’’ பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோபிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானதுஅராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும்மனிதத்தன்மையற்றதும் ஆகும்மானமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கேஎதிரான குற்றம்’’ என்றார் காந்திநேர்மையும் நீதியுணர்வும் கொண்ட யாருமே இஸ்ரேல் அரசை ஒருபோதும் ஆதரித்ததில்லை

பல வருடங்களுக்கு முன்பு இறைவனின் திருச்சித்தப்படி தேராகின் மகனாகிய‌ ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான்தேசத்தை கி.மு.2161 ல் வந்தடைந்தார்ஆபிரகாமின் மகன் ஈசாக்குஈசாக்குக்கு இரண்டு மகன்கள்ஏசா மற்றும் யாக்கோபுஈசாக்கின் இளைய மகன் யாக்கோபின்மேல் கடவுள் பிரியமாகஇருந்தது மட்டுமன்றி அவனுக்கு இஸ்ரேல் என்றும் பேரிட்டார்.
"அப்போது அவர்உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." - ஆதியாகமம் 32:28

இப்படியாகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்றஎண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்ததுஇந்த எண்ணம் சீயோனிசம் என்ற யூத தேசிய விடுதலை இயக்கத்தின்மூலம் உத்வேகம் பெற்றதுசீயோன் எனப்படுவதுஜெருசலேமில் உள்ள ஒரு மலை ஆகும்1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்இந்த சம்பவம் முதல் அலியாஎன்றழைக்கப்படுகிறது1897ல் யூத நாட்டின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட தியோடர் ஹெர்சல் ஸ்விட்சர்லாந்தில் பேசல் என்ற இடத்தில் முதல் சீயோன் மாநாட்டைக் கூட்டி யூதமக்களுக்கான புதியதொரு நாட்டை அமைக்க யூதர்களுக்குள்ள உரிமையைப் பிரகடனம் செய்தார்1904 முதல் 1914 வரை இரண்டாவது கட்டமாக யூதர்கள் ரஷியா மற்றும் போலந்திலிருந்துகுடிபெயர்ந்தனர்இது இரண்டாவது அலியா என்றழைக்கப்படுகிறது.

ஒட்டோமான் அரசின் இறுதிப்பகுதியில் துருக்கியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அரபியரிடையே அதிருப்தி ஏற்பட்டதுஓட்டோமான் அரசிடமிடமிருந்து சுதந்திரம் வாங்கிக்கொடுக்கப்படும் என்ற‌ வாக்குறுதியை ம்பி யூதர்களும் அரபிகளும் முதல் உலப்போரில் அமெரிக்காபிரிட்டன் உள்ளிட்ட‌ நேச நாடுகளுக்கு ஆதளித்தர்இதனால் அரபு தேசியம்அமைக்கப்பவேண்டும் என்ற‌ எழுச்சி ஏற்பட்டதுபாலஸ்தீனத்திலுள்ள‌ அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் கைமை ர்ந்தது.

முதல் உலகப்போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துமேலும் மோசமடைந்து வந்த உலகளாவிய பொருளாதார சூழலாலும்வேறுபல காரணங்களாலும் அரபியர்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர்பெருமளவில் அதிகரித்த யூதக் குடியிருப்புகளும் யூதர்களால் வாங்கப்பட்ட பண்ணை நிலங்களிலும்அவர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் அரபியர்களை பணியமர்த்தாததும் அரபியர்களின் கோபத்தை அதிகரித்தனஇதையடுத்து அரபியர்கள் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர்.

ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்தக் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்ததுஇதன்படி பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதர்களுக்கும் இன்னொரு பகுதிஅரபியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும்இந்த அறிக்கை நாசபையில் தீர்மானம் 181 வடிவத்தில் நவம்பர் 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇத்தீர்மானத்திற்கு 33 நாடுகள் ஆதரவாகவும்13 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன10 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லைஅரபு லீக்கைச் சேர்ந்த அரபு நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பதுகுறிப்பிடத்தக்கதுஇந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டவுடன் பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தீனப் குதிகளைப் பிடிப்பதில் டும் மோதல் ஏற்பட்டது1948, மே 14 அன்றுஇஸ்ரேல் நாடு பிரகடப்படுத்தப்பட்டதுறுநாளே அரபு நாடுகள் இஸ்ரேல் மீது டையெடுத்த‌.

அதே போன்று இவர்களுக்கு பல எச்சரிக்கைகள்,உதாரணங்கள் காட்டியும் அல்லாஹ்வுக்கோ,நபிமார்களுக்கோ (பல நபிமார்கள் இந்த சமூகத்திட்கே அனுப்பப்பட்டது)
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன்பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள் என்று அறிவித்தோம்.(17:04)

மன்னர் பைசல் அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும்,பாலைக் குடித்தும வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பலத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

கலீபா உமர் (ரழி), தளபதி அலிப் அர்ஸலான் (ரஹி), ஸுல்தான் நூருத்தீன் ஸின்கி (ரஹி), ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி), ஸுல்தான் முலப்பர் கதஸ் (ரஹி)ஸுல்தான் முஹம்மத் அல்பாதிஹ் (ரஹிபோன்ற புகழ்பூத்த வீரத் தலைவர்களை முஸ்லிம் உம்மத் பலஸ்தீன மீட்புப் போராட்டத்தில் அவர்கள் ஈட்டிய வெற்றியின் மூலமே பெற்றுக் கொண்டது.



உமர் முஹ்தார் போன்ற பாலை வானச் சிங்கம் இன்னும் ஓர் முறை தோன்றாமல் போவதும் இல்லை புனித குதுசை மீட்டெடுக்க ஒரு மா வீரன் வராமல் இருக்கப் போவதும் இல்லை கிங் பைசல் போன்ற முதுகெலும்புள்ள அராபிய தலைமககள் எப்போது கண் திறக்குமோ...!

http://madawalanews.com/9679

http://4freeproxy.com/browse.php?u=81SQ7bg5SAvCG4Sf34eXa0sbAcV0%2BOwBzIvAiFLd%2BczuZByn7WJ5DTG%2FG8KoQnmhlA%3D%3D&b=29