Tuesday, 12 April 2016

பலம் நிறைந்த முஸ்லிம் கூட்டமைப்பு !!

உலகெங்கும் வளர்ச்சிப் பாதையை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த இஸ்லாம் ஒரு பலம் கொண்ட,சமூகமாக மாறிக் கொண்டிருக்கும் தருவாயில் பல தரப்பட்ட கோணங்களிலும் எம்மை சாடி தீவிர வாதிகளாகவும் ஒடுக்கி  மடக்கி சித்தெரித்து  காட்டிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடி உலகில் நாம் ஒரு முன்மாதிரி இஸ்லாமிய சமூகக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய பண்பாடு,ஒழுக்கம் என சமூக மேன்பட்டை வளர்க்கின்ற நாம்தான் ஒரு முன்மாதிரி சமூகமாக மாற்று சகோதரர்களுக்கு இருக்க வேண்டும் அனால் இன்று அரசியல் இலபாம்,கோபம் ,காழ்புணர்ச்சி,வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்கவும் இன்றி பிரசேத வாதம்,கட்சி வாதம் பேசிக் கொண்டு,தூற்றிக் கொண்டு இருக்கிறோம் அனால் சகோதர மொழி பேசிகின்றவர்களுக்குள் எந்த விதமான சம்பவங்களோ ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு இந்த தேர்தல் அமையவில்லை 

இஸ்லாமிய சமூகம் விடுதலை பெறுதல் மற்றும் சமூக மாற்றம் எல்லாம் வெறும் இபாதத்துகளில் முழுமையடைந்து மார்க்க வழிமுறைகளை பின்பற்றுவதால் மட்டும் நடந்து விடும் என்ற கற்பனை வழிமுறைகளில் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு உடன்பாடில்லை. அது மனிதர்களின் கடின முயற்சியாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளாலுமே இந்த பூமியில் வாழ முடியும் என்ற நியதிக்கு உட்பட்டது. 

பலம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது, பலவீனம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடு தலைதூக்கிவிடுமேயானால் அந்தச் சமுதாய அமைப்பு அழிந்தே போகும்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னுடைய மரணத்திற்குப் பின் நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு விடாதீர்கள். இன்னும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்

இன்று முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலை, இவர்கள் இவ்வுலகத்திற்கே தேவையற்றவர்கள்-பிரச்சனைக்குரியவர்கள் என்று மற்ற மக்களால் பார்க்கப்படும் நிலை ஏதோ இன்றோ நேற்றோ அல்லது ஒரு சில நாட்களிலோ உருவானது அல்ல.இஸ்லாத்தை என்று முஹம்மது(ஸல்) அவர்கள் புனரமைத்தார்களோ அன்று முதல் இஸ்லாத்தினை அழிக்க இஸ்லாத்தின் பரம வைரிகளால் பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருக்கிறன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கேற்ப தங்களது திட்டங்களை இஸ்லாத்தின் எதிரிகள்புனரமைத்துக் கொண்டுள்ளார்கள்.

மத ஆதிக்கம்,இஸ்லாமிய இயக்கங்கள்,தலைவர்கள் கொண்ட இந்த சிறிய இலங்கை தீவில் நாமே நம்மை வெட்டி,குத்தி முரண் பட்டு கட்சி,கோத்திரம் என்று இன்னும் பல கட்சிகளாக கொள்கைவாதிகளாக பிரிந்து செல்கின்றோம் இதனை அந்நிய சமூகம் வேடிக்கை பார்த்து சிரித்திக் கொள்ளுமளவுக்கு நாம் இருக்கின்றோம் இது ஒரு குழுவையோ அல்லது கோத்திரத்தையோ சாடாது இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சாடும்.

அண்மையில் நடந்த காத்தான்குடி சம்பவங்கள் ஒரு எடுத்துக் காட்டாக அமைகின்றது இத் தேர்தலில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடந்திருக்கவில்லை ஆனால பிற்பாடு ஏதேதோ கேள்விப்படுகிறோம் இது ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லை எமது மத தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,மற்றுமல்லாமல் சகல முஸ்லிம் புத்திஜீவிகளுக்குமான ஒரு பங்காக அமையும்,இது இஸ்லாமிய சூழலின் ஒரு பாரிய விளைவை தோற்றுவிக்கும்.

இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் கலகமும், பெரும் சீரழிவும் ஏற்படும். (ஏக இறைவனை) மறுப்போர்,ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (08:73)
இன்னும் நாம் 50 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது .

Zuhair Ali (Ghafoori,PGD,MBA )
Kinniya-former employee of qatar embassy
778191787

http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/

No comments:

Post a Comment