Tuesday 19 November 2013


இஸ்லாம் ஒருமைத்துவத்தையும்,அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றது, காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.
மனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது,மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும்? இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்?

மனிதர்கள் பிரிந்து கிடக்கின்ற, பிளவுபட்டுக் கிடக்கின்ற சூழ்நிலைகளை நாம் ஆழ்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். உலக இலாப-நாட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும். பலமும் வளமும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.

‘’…இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்….’’(22:78)

நம்மில் முஸ்லிம் என்ற ஒருமையும்,இஸ்லாம் என்ற கொள்கையும்தான் இருக்க வேண்டும்,முஸ்லிம்கள் தங்களுக்குள் துணை நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு உவமையாக,

"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல கூறினார்கள். அப்படிக் கூறும்போது தங்கள் கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னிக் காட்டினார்கள்.

கட்டி அடுக்கி எழுப்புவதால் 'கட்டடம்' என்றானது. முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் பிணைந்திருக்க வேண்டியதை, "கட்டடம்" உவமை மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருங்கக்கூறி விளக்கினார்கள். அண்ணலாரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் சமுதாயமாக இருப்பதால்தான் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறதென்றால் மிகையில்லை.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பலநூறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் அவற்றுள் பெரும் பிரிவுகளாக ஷியா-ஸுன்னீ பிரிவும் மாத்த்திரமே உள்ளது எனினும் நாம் பல ஜமாத்துக்களாக பிரிந்து  இஸ்லாத்தை உலகத்தார் அருவருப்புடன் பார்ப்பதற்கு வழிவகுத்து வைத்திருக்கின்ரோம்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்- 3:104) 

முஸ்லிம்கள் அனைவரும் பிரிவுகள் அனைத்தையும் சற்று ஒருபுறம் ஒதுக்கி விட்டு, இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களை / செயல்களை, நியாயப்படுத்துவதை / ஆதரிப்பதை / எதிர்ப்பதை / தாக்குவதைக் கைவிட்டு, தவறில் தொடர்ந்து இருப்பவர்கள் நேர்வழியில் வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்துக்கும் முதலாவதாக, உலகமுஸ்லிம் சமுதாயம் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதை மனமார விரும்பி அதற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ, ஃபாஸிஸ சக்திகளும் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுப்பதற்கு, முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் உலக முஸ்லிம்களுக்கான தனித்ததொரு தலைமை இன்மையும் முக்கிய காரணங்களாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன

எத்தனையோ வளர்ந்த முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன இவ்வுலகில்,ஆனால் அவரகளுக்குள் ஸீயா-முஸ்லிம் பிளவு தவிர வேறு எந்த ஜமாத் பிரிவகளும் இல்லை எனினும் பாகிஸ்தான், இந்தியா ,பங்களாதேஸ்,இலங்கை போன்ற சிறு நாடுகளில்தான் இத்தனை ஜமாத் பிளவுகளும் பிரச்சினையும் ..!

ஒரு சிறிய உதாரணம் ' உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும்அதான் ஒலி எல்லா நாடுகளிலும் ஒரே விதமான அரபு மொழியில் சொல்வதையும் ஒரே விதமான இகாமத்தும் ஒரு நல்ல சான்றாகும்' 

மாத்த்திரமல்ல உலகத்தில் உள்ள எந்த மூளையில் உள்ள முஸ்லிமும் குர்ஆனின் ஆரம்ப சூரவும் (அல்-பாதிஹா) இருதி சூராவுமான (நாஸ்) வாய்ப்பாடமக சொல்வார்கள் 

உன்னைத் திருத்து உலகம் திருந்தும் என்பது போல நானும் திருந்தி நம் குடும்பமும் திருந்தினாலே போதும் உலக முஸ்லிம்களின் ஒருமைப் பட்டை நிலை நாட்டலாம்.

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப்பிரிந்து விட்டோரைப்போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.(அல்குர்ஆன்- 3 : 105)

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219 கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.5 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (http://www.alukah.net)

ஆக, நாம் முஸ்லிம் என்ற நாமத்துடன் இஸ்லாம் என்ற கொள்கையுடன் இருக்கப் பிடிப்போமையானால நாளை நாம் ஒரு குடும்பமாக வாழலாம்.

By:Zuhair Ali (Ghafoori-UoC)







சோனக வரலாற்றை தொலைக்கும் எம் சோதரர்கள்...!

சோனகர் எனும் பதமானது ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட மூர்ஸ்எனும் பதத்தின் நேரடி மொழி பெயர்ப்பாகவே போர்த்துக்கீயர் இந்நாட்டிற்குள் காலடி வைத்த காலம் முதல் பாவனையில் இருந்து வந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை, ஆனாலும் போர்த்துக்கீயருக்கு முந்திய கால இந்திய தமிழ் இலக்கியங்களும், வட இந்திய இலக்கியங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகளும் கூட சோனகர்எனும் வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறது.

மூர்ஸ் எனும் ஆங்கிலப் பதம் உலகின் பார்வையில் முக்கியத்துவம் பெறுவது ஸ்பெயினைத் தளமாகக் கொண்டு இயங்கிய இஸ்லாமிய ஆட்சிக்காலத்திலாகும் (கி.பி 711 – 1492 ).

அந்த வகையிலே சில வேளைகளில் பொதுவாக ஸ்பெயினில் வாழ்ந்த இஸ்லாமியர் அனைவரும் மூர்ஸ் எனும் வகைப்படுத்தலுக்குள்ளேயே வருகின்றனர் என்பது உண்மையாகினும், அடிப்படையில் அரேபியரும் மேலும் சில இனத்தவரும் கலந்தே மூர்ஸ் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என்பது உணரப்பட வேண்டும்.

மூர்ஸ் என உலகில் அறியப்படுவோரின் முன்னோர் அல்லது ஆரம்பத்தினைப் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான வரலாறு அவர்களை மேற்கு ஆபிரிக்கர்கள் என்று வரையறுக்கிறது. அதிலும் ஒரு படி மேலே செல்லும் சில ஆய்வாளர்கள் Berber (பேபர்) இன மக்களே இவர்கள் என்று நிறுவவும் செய்கிறார்கள்.

போர்த்துக்கீயர் இலங்கைக்குள் வந்ததும், இலங்கையில் அவர்கள் கண்ட முஸ்லிம்களை மூர்ஸ் என அடையாளப்டுத்தியதன் பின்னணியில் இஸ்லாம் எனும் ஒற்றுமை ஒரு புறம் இருக்க, கடல் வர்த்தகத்தின் ஆதிக்கம், கலாச்சாரம் மற்றும் உருவ ஒற்றுமைகளும் நிச்சயமாக இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்றும் கூட இலங்கையிலே முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கு ஆகக்குறைந்தது பொது நிறமான தோல் அல்லது வெள்ளை என இலங்கையில் அழைக்கப்படும் தோல் நிறமாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அவர்கள் உயராமாகவும் இருப்பார்கள் எனும் ஒரு எதிர்பார்ப்பு முஸ்லிம்கள் அல்லாதோரிடம் இருக்கிறது.
குணாதிசயங்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களாகவும் அதே வேளை பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபடுவோராகவும் இருப்பதைக் கொண்டும் இலங்கையில் மூர்ஸ் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்தீவில் குடியேறிய அறபு வர்த்தகர்களின் வழித்தோன்றல்களே யாம் என இலங்கைச் சோனகர் வாழையடி வாழையாக நம்புகின்றனர்.ஒரு சிலர் விவாதத்துக்கு நாம்தான் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த சோனகர் அல்லது சுவனர் என்று எடுத்த்துக் கொண்டாலும் எம்மால் அவற்றை நிரூபிப்பதட்கான ஆதாரங்களோ,ஆக்கங்களோ இல்லை எனலாம். 

வரலாறு,பூர்வீகம்,அடிச்சுவடு,வழித்தோன்றல் இவை ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் அடையாளமாக கணிக்கப்படும் அவ்வமயம் எமது இஸ்லாமிய வரலாறுகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை நிரூபிக்க  மக்கா,மதீனா,பாலஸ்தீன்,எகிப்து என பல சான்றுகள் மூலம் அவர்களது பூர்வீகத்தையும்,பாரம்பரிய வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

எடுத்துக் காட்டாக, மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கற்பாறையில் தனது தடியினால் அடித்து 12 நீர்ச் சுனைகளை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டான். ஏன் இந்த 12 நீர்ச் சுனை? ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில் நீரைப் பருக வேண்டும் என்பதற்காகவே அந்த 12 கூட்டதினருக்கும் அல்லாஹ் தனித் தனி நீர்ச் சுனைகளை ஏற்படுத்தினான்.

அல்குர்ஆன் கூறும் வரலாற்றினைப் பார்ப்போம். அல்குர்ஆன் வரலாறு சொல்லும் போது சமூகத்தைப் பற்றியும் அல்லது சமூகமாகவே வரலாற்றினைச் சொல்வதனைக் காண்கிறோம். சிலபோது அவற்றின் இடப் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றைக் குறிக்கும் அல்லது பெயர் குறிப்பிடாது சமூகமாக வாழ்ந்தனை மாத்திரம் குறிக்கும். அவற்றின் வாழ்வு முறை பற்றியும் அதன் நிகழ்வுகள், அழிவிற்கான காரணங்கள், சிலபோது அவற்றின் அழிவின் வகை பற்றியும் குறிப்பிடும்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் தனியான இனம்என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் முஸ்லிம்என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

எனினும் நம்பத் தகுந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் எழுத்தோவியங்களிலிருந்து நாம் விளக்கங்கள் தேடும் போது இலங்கையின் முதல் பிரதம நீதியரசரும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவருமான சேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்டன் என்பாரின் கருத்துரை நம் முன் நிற்கின்றது. 
''இத்தீவில் குடியேறிய முதல் முகம்மதியர் ஹாஷிம் சந்ததியினரான அறபிகளே எனவும் எட்டாம் நூற்றாண்டில் அவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வந்தார்கள் எனவும் அன்னவரின் பரம்பரையினர் மத்தியில் வழக்கிலிருக்கும் மரபு வரலாறொன்று கூறுகின்றது என அவர் எடுத்துரைக்கின்றார்.''

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு நம் சோனக வரலாறு பல இதிகாசங்களையும்,பரம்பரியங்களையும் நீண்ட வரலாற்றுடன் காண முடிந்தாலும் நாம் இன்று வரலாறு தொலைத்த சமூகமாக அல்லது இனமாக எம் வரலாற்று ஏட்டில் எழுத வெட்ரிடம் வைப்போமேயானால் நாளை நாம் கைசேதப்படும் நாளும் இல்லாமலில்லை.

நாம் இன்று பிரதேசவாதமும்,கொள்கைவாதமும் பேசியே நாமே நம் சோனக -முஸ்லிம் வரலாறுகளை காட்டிக் கொடுத்து,அளிக்க முட்படுகிறோம் ஏன் நாம் நமது பூர்வீக வரலாறு,வழித்தோன்றல்களை ஆராய்ந்து இனவாதம் பேசுபவர்களுக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது.

ஆக,நாம் இதுவரை தம்மைப்  பற்றி மத்திரமே சிந்திக்கும் நாம் ஏன் மாற்று மதங்களான பௌத்த,இந்து,கிறிஸ்துவ மதங்கள் எங்கு,எப்படி தோன்றின என்ற இதிகாச வரலாறுகளை  நாம் ஆராய்வதில்லை 

நமக்குள் ஒரு சில சில்லரைப் பிரச்சினைகலை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்போமைனால் நாளை நாம் வரலாறு மத்திரமல்ல நம் இனமும் அழிந்து விடக்கூடும் ஆக புத்திக்  கூர்மையுடனும்,விவேகத்துடனும் இன்றைய சூழ்நிலையைக் கையால வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

எம்மில் ஏத்தானை பேர் இஸ்லாமிய வரலாறு அல்லது உலக முஸ்லிம்களின் வரலாறு போன்றவற்றில் தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றுருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் மிக மிக அரிதே ஆக நாம் இன்று ஆகக் குறைந்த பச்சம் நமது குடும்ப,கோத்திர,சொந்த ,தனிமனித வரலாறையேனும் தேடிப் படிக்க வேண்டும்.

ஆதலால் நாம் இன்று அவர்களது வரலாறு பூர்வீகம் இனம்,மதம் போன்ற இன்னோரன்ன வரலாறுகளை தேடிப் படித்து,பிடித்து நிரூபித்த்துக் காட்டுங்கள் ஏன் எனில் விஜயன் கூட இஸ்லாம் இலங்கையில் பரவிய பின்புதான் இங்கு வந்திருக்கிறான் என்று நம் வரலாறு சொல்கின்றது.

சோனக வரலாற்றை  தொலைத்த சமூகமாக அல்லது இனமாக ஆகவிடாமல் நாம் ஒன்று சேர்ந்து ஒரு வரலாறு படைப்போம் ...!