Thursday 30 June 2016

பண்பாடுகளே  இஸ்லாமிய சமூகத்தின் இலக்கணம்



எம் சமூகத்தில் பல வேறுபட்ட சீர்திருத்த வாதிகள்,முஜத்தித்கள் வந்து சென்றாலும் தொழில்நுட்பம்,பரிணாமவளர்ச்சி,நாகரீகம் என பல வளர்ச்சிக்குள் சிக்குண்ட நம் சமூகம் தர்க்கம் செய்வதும்,வாதம் புரிவதுமாய் சமூகம் சந்தைப் படுத்தப் பட்டுள்ளன.



சமகால உலகில் இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு அறைகூவல்களையும் சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இளைய இரத்தங்களின் ஆத்மீக ஒழுக்க வாழ்விற்கு எதிரான கருத்து ரீதியான, ஒழுக்க, பண்பாடு ரீதியான சவால்கள் மிகப் பயங்கரமானவைகளாக உள்ளன.

இஸ்லாமிய சமூகத்தில் ஈமானை சூரையாடுகின்ற, அவர்களுடைய உயர் ஒழுக்க மாண்புகளைத் தகர்த்து எறிகின்ற, இஸ்லாமிய இலட்சியக் கனவுகளைக் கொச்சைப்படுத்துகின்ற பல்வேறு அறைகூவல்களுக்கு நமது சமூகம் ஆளாகின்றார்கள். நவீன கல்விக் கோட்பாடு, நவீன இலக்கியம், தகவல் தொழிநுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள், சினிமா, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகளை இதில் அடையாளப்படுத்தலாம்.


முகம்மது நபி ஸல் அவர்களின் இருண்ட காலங்களில் கூட எங்காவது ஒரு பகுதிக்குள் அல்லது ஒரு நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து விட்டால், மாற்று மதத்தவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் பழக்கம்,பண்பாடு இருந்து வந்தன,அதில் குறிப்பாக மதவழிபாடு,சகோதரத்துவம்,சமஉரிமை,வியாபாரம்,சமூக ஒற்றுமை உள்ளடங்கி இருக்கும், அல் குரான் இவ்வாறு வழி காட்டுகிறது



‘இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.’ (9:6)



மதீனாவில் நபிகள் நாயகம் உருவாக்கிய பண்படை வெளிக்காட்டும் சாசனத்தில் இடம் பெற்ற சில விதிகளைப் பாருங்கள்:

1. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்கள் எமது ஆதரவுக்குரியவர்கள். அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். அவர்களது எதிரிகளுக்கும் உதவ மாட்டோம்.

2. யூதர்கள் அவர்களின் சமயத்தின்படி நடப்பார்கள். முஸ்லிம்கள் அவர்களது சமயத்தின்படி நடப்பார்கள். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கி. பி. 630-இல் நஜ்ரான் நாட்டுக் கிறிஸ்தவர்களுடன் நபிகள் நாயகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகள் வருமாறு:

நஜ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் குடிமக்களின் உயிர், நிலம், உடைமைகள், வணிகம், மதம், வணங்கப்படும் சிலைகள் ஆகிய அனைத்தும் இறைவன் மற்றும் இறைத்தூதரின் பாதுகாப்பில் உள்ளன.



பண்பாடுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் 'உம்மத்து ன் வஸத்' நடு நிலையான சமூகமாக திகழ வேண்டும் என்ற இதிகாசங்களையும் இஸ்லாம் சொல்ல மறக்கவில்லை,பொதுவாக நபி ஸல் அவரகள் பல இன்னல்களுக்கு மத்தியில் மாற்று மத,நாகரிகமற்ற சமூகத்துடன் முகம் கொடுத்து சாணக்கியமாக கையாள்தமை அவர்களின் சாதுரியங்களில் ஒன்ரு எனலாம்.

நாம் செவ்வனே இஸ்லாம் சாந்தி,சமாதானம் பேசுகின்ற மார்க்கம் என குரல் கொடுத்தாலும் இன்றைய சமூக வலயத்தளங்களில் கூட ஒரு பண்பட்ட சமூகம் வளர்ந்திருப்பதை காணமுடிவதில்லை.



அந்த இருண்ட அறியாமை காலங்களில் கூட நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் தூதுவர்களை வைத்துக் கொள்வார்கள்,பொதுவாக ஒரு நாட்டு ஜனாதிபதியாக இருந்தாலும் அவரகள் மென்மையான,பண்பான வார்த்தைகள் மூலம் ஒரு தூதுத்துவ கடிதமொன்றை அனுப்பி வைப்பார்கள்.

''அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையன் பெயர் கொண்டு,ஹபஷா நாட்டின் அரசர் நஜ்ஜாஷி அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து,நேர் வழியை பின்பற்றுகின்றவர்களுக்கு சாந்தி,சமாதானம் உண்டாகட்டும்,பின் நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா என சாட்சி கூறுகிறேன் இன்னும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் உம்மை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன்''



என்ற அழகிய உரைநடை,பண்பான வார்த்தைகளுடன் இஸ்லாத்தை வெளிப்படுத்துகின்ற அழகிய வாசகங்கள் உள்ளடக்கி முறைப்பாடுகளை,அழைப்புகளையம் இடுவார்கள்,ஆக எங்களது செயற்பாடுகள்,நடவடிக்கைகளே நாம் யார் என தீர்மானிக்கும்,வெறுமனே ஒரு அந்நியன் குரல் எழுப்பி விட்டார் என்பதற்காக நாம் கூக்குரலிட்டு கூச்சலிடுவது நாகரீகமற்றது.



‘’ஒரு எறும்பு நபிமார்களில் ஒரு நபிக்கு கடித்ததும் அந்த எறும்பின் கூடையும் (இடம்) எரிக்க உத்தரவிட்டு அவ்வாறே எரிக்கப்பட்டதும் அல்லாஹ் ' ஒரு எறும்பு கடித்ததட்கா அனைத்து கூட்டத்தையும் அழிக்கச் சொன்னீர்' என்றான்’’



எனவே ஒருவர் செய்யும் செயல் ஒட்டுமொத்த  கூட்டத்தையே தீர்மானமெடுக்க முடியாது  அது போலவே எமது பண்பாடு ஒழுக்கம் வெறும் வியாபாரம்,கல்வி,ஆடை,நடத்தைகளில் மாத்திரம் நின்றுவிடாமல் பண்பாடு நம் நாவில் இருக்கவேண்டும்



இன்று மனிதன் தனிமனித சுதந்திரம் என்ற எண்ணக்கருவை விரிவாக்கிக் கொண்டு பகுத்தறிவு வாதத்தையும், பொருள்முதல் வாதத்தையும் மூலமாக் கொண்டு வாழ்கிறான். மனித சிந்தனைக்கூடாக சமூக வாழ்வை அமைக்கிறான். இதனால் சிந்தனை மாற்றத்துடன் அடிக்கடி வாழ்க்கை முறைகளும் மாறகின்றன



மனித நடத்தைகளிலும் பண்பாடுகளிலும் எவ்வித தாக்கத்தையூம் செலுத்தாத அடிப்படை வணக்கங்களை மாத்திரம் பூஜித்துக்கொண்டிருப்பவர்களது நிலைப்பாட்டை இஸ்லாம் மறுக்கிறது,ஆக சமூக ஊடகங்கள் எமக்கு கிடைத்த ஓரு அறப்பணி அதனை சாதுரியமாக கருத்துக்களை பரிமாற பழக்கங்கள்ப,ண்பாடுகள் எம் சமூகத்திடம் வளர வேண்டும்.



With best regards,
Zuhair Ali (MBA,PGD,EDM,GHAFOORI)
Freelance Writer and Socialactivist)
0778191787 KINNIYA

1 comment:

  1. Merkur Safety Razor Merkur Chrome Long
    Merkur - Open Comb Safety Razor, Chrome - 바카라 사이트 3.75 Ounces - Open Comb - Long Handle - Safety 인카지노 Razor, Chrome - 3.75 Ounces - Open Comb - Long 메리트 카지노 고객센터 Handle - Open

    ReplyDelete