Tuesday 9 December 2014


ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்..!! 

இஸ்லாத்தில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்படுகின்ற உரிமைகளாகும் அவை எதோ ஒரு அரசாலோ சட்ட மன்றத்தினலோ வழங்கப்பட்டவையல்ல,மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு  காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம்,சர்வாதிகரிகளின் அரசனையும் இவ்வாறு மாற்றப்படகூடியதே !

அவர்களுக்கு ஒத்து வரகக்கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள் இல்லை என்றால் விளக்கி விடுவார்கள் அனால் இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ திருத்தவோ எந்த சட்ட மன்றத்திற்கும்,அரசுக்கும் அறவே உரிமை இல்லை ஏனனில் அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை.

வெற்றுத் தாலில் எழுதி வீண் விளம்பரத்துக்கு மட்டும் பயன் படுத்தப்படும் உதவாக்கரை ஆவனங்கள அல்ல அவை வெளிச்சம் போட்டு காட்டிய பின் நடை முறை வாழ்வில் அமல் படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை அமல் படுத்துவட்கு இசைவாணை இல்லாத வறட்டு கொள்கைகள் அல்ல அவை.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான் (அல் குரான்)

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை மனிதனுக்கு வழங்கப்பட்ட எல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே..! அடைக்க்கலாம்க அளிக்கப்பட அதிகாரமே ஆகும்,இத்தகைய அதிகர்ணகளை பெற்றவர் மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக சாட்சியளிக்க வேண்டும் அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்த அபூ பக்கர் ரலி அவர்கள் அரசாட்சியின் பொது முதல் உரையில் இவ்வாறு ''நன் நல்லது செய்தல் என்னோடு ஒத்துழையுங்கள் தவறு செய்தல் என்னைத் திருத்துங்கள் இறைவனின் இறை தூதரின் ஆணையகளை நன் நிறைவேற்றும் வரை எனக்கு கீழ் படியுங்கள் நன் வலி தவறினால் எனக்கு கீழ் படிய வேண்டாம்.

இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படுகின்ற இஸ்லாமியச் சட்டங்களுக்கினங்க நிர்வகிக்கப் படுகின்ற பகுதிகள் இஸ்லாமிய அரசு (தாருல் இஸ்லாம்) எனப் படும் அப் பகுதி வாழ்கின்ற மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருந்தாலும் அல்லது அவர்களுள் சிலர் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படாத இஸ்லாமிய சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்படாத பகுதிகள் வேற்றரசு (தாருல் ஹர்ப் ) எனக் கருதப் படும் அங்கு வாழும் மக்கள் எம்மதத்தை சர்ந்த்தவராக இருந்தாலும் சரியே.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.

குடிமக்களின் பேச்சு மற்றும் சுதந்திரத்திற்கு இஸ்லாம் முழு உத்தரவாதம் அளிக்கிறது அனால் ஒரு நிபந்தனை,ஒழுக்க மேம்பாட்டுக்கு வாய்மை பரவுதலுக்கு துணையாக அது அமைய வேண்டும் கொடுங்கோன்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலகது.

அரசின் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனினும் இலங்கை சுதந்திரம் காலமுதல் இடம்பெற்ற தேர்தல்கள் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது முதல் வருடங்கள் தனிக் கட்சி ஆதிக்கம் பெற்ற கள்ளப்பகுதியாகும் (UNP) அடுத்த வருடங்கள் (SLFP) செல்வாக்கு பெற்ற காலமாகும்.

என்றாலும் காலப்போக்கில் ஒரு கட்சி தனியாக வெற்றி கொள்ள முடியாத ஒரு நிர்பந்தம் ஏற்பட்டு பெரும்பான்மை கட்சியினர் சிறுபான்மை கட்சியின் கூட்டமைப்பு தேவைப் பட்டது,அதிலும் விசேடமாக எமது முஸ்லிம் கட்சிகள் பேரம் பேசும் கட்சிகளாக காணப்பட்டு வந்தாலும், சமகால அரசியல் சதுரங்கம் ஒரு விளையாட்டும்,சூதுமாக ஆகிக்கொண்டு போவதை எம்மால் கண்காணிக்க முடிகின்றது மாத்திரமன்றி இது சிறு பன்மை முஸ்லிம்களாகிய எம் வாக்கு வங்கிகள் பெரும் பன்மை கட்சிகளுக்கு செல்ல இருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை.

என்றபோதிலும் நாம் ஒரு அந்நிய நாட்டில் சிருபன்மைகைய வாழ்வதனால் இஸ்லாமிய அரசியலோ,ஆட்சியோ செய்ய முடியாது மொத்தத்தில் நாம் சக்தி,புரட்சி,சமூக விடுதலை போன்ற இன்னோரன்ன வாய்ப்புகளையும்,சந்தர்ப்பங்களையும் நழுவ விட்டு வருகின்றோம்.

ஆக எம் சமூகம் இனி ஒரு போதும் கட்சிக்காக அல்லது கட்சி முடிவுக்காக எதிர்  பார்த்து நிற்கும் என்பது அசாத்தியமே, வேற்றரசுடன் இஸ்லாமிய அரசு ஓர் உடன் படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளுமாயின் அதனை முறைப்படி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஏமாற்றுதலும் நம்பிக்கை கேடு செய்தலும் இஸ்லாத்தில் இடமில்லை, ‘ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி’என முஸ்லிம் சமூகத்தின் வரலாறு வெறும் ஓட்டைப் படகாக பயணிக்க இனிதும் வேண்டுமா என்ற கேள்வி ஒவ்வொரு முஸ்லிமும் கேட்ட வண்ணமே இருக்கின்றான்.


http://madawalanews.com/48654
http://www.sonakar.com/?p=33063
http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/