Thursday 26 May 2011

இஸ்லாமும் இயற்கை கோட்பாடும்



தவ்ஹீத் التوحيد  -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- جماعة التبليغ  என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி جماعة الاسلامي  என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் جماعة المسلمين  என்பதன் பொருள் முஸ்லிமான  கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா مذهب சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!
மேல் கூறிய அனைத்து அம்சங்களும் ஒவ்வொரு முஸ்லிம்களிடமும் இருக்க வேண்டியவை தான்   முறையே ஓர் இறைக் கொள்கை,எத்தி வைத்தல்,இஸ்லாமிய கூட்டமைப்பு இதுவல்லாத இன்னும் எத்தனையோ விடயங்கள் இருந்தும் ஏன் ஓரிரு விடயங்களுக்காக மாத்திரம் சண்டை,பிழவு பிடிக்க வேண்டும் ...! 

அல்லாஹ்வின் கயிற்றை  (அல்-குர்ஆன் ) பலமாக பற்றிப்பிடித்துக் கொள்வோம் மாறாக கொள்கை வளர வேண்டும்,கோத்திரம் வளர வேண்டும் என்ற கோட்பாடை எரிந்து விட்டு இஸ்லாம் என்ற ஓர் இறைக் கொள்கையை வளர்ப்போமே..! இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ஞாபகம் ஊட்டுவதன் மூலம் பிரயோசனம் பெற வேண்டும் எனற கூற்றுக்கேட்ப மாத்திரம் என்று எடுத்துக் கொள்ளவும் .
கீழ் காட்டும் ஹதீத் நல்ல ஒரு எடுத்துக் காட்டாகும்:
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (
ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள். 
by:Zuhair Ali




Wednesday 25 May 2011

A Muslim is the brother of a Muslim

Hadith 36 Arabic text

Meanings  



t was related on the authority of Abu Hurairah, radiyallahu 'anhu, that the Prophet, sallallahu 'alayhi wasallam, said:
"Whosoever relieves from a believer some grief pertaining to this world, Allah will relieve from him some grief pertaining to the Hereafter. Whosoever alleviates the difficulties of a needy person who cannot pay his debt, Allah will alleviate his difficulties in both this world and the Hereafter. Whosoever conceals the faults of a Muslim, Allah will conceal his faults in this world and the Hereafter. Allah will aid a servant (of His) so long as the servant aids his brother. Whosoever follows a path to seek knowledge therein, Allah will make easy for him a path to Paradise. No people gather together in one of the houses of Allah, reciting the Book of Allah and studying it among themselves, except that tranquility descends upon them, mercy covers them, the angels surround them, and Allah makes mention of them amongst those who are in His presence. Whosoever is slowed down by his deeds will not be hastened forward by his lineage."

Background
This hadith was recorded by Imam Muslim by the above text. However, there is another version of the hadith where it was recorded by both Imam Muslim and Imam al-Bukhari with the following text:

"A Muslim is the brother of a Muslim - he does not wrong him nor does he forsake him when he is in need; whosoever is fulfilling the needs of his brother, Allah is fulfilling his needs; whosoever removes distress from a believer, Allah removes from him a distress from a distressful aspect of the Day of Resurrection; and whosoever conceals the faults of a Muslim, Allah will conceal his faults on the Day of Resurrection."

We see that in this hadith the obligations towards other Muslims are emphasised and the fulfillment of brotherhood is again stressed.



Friday 13 May 2011

மத்கப் வெறி

தவ்ஹீத் -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் என்பதன் பொருள் முஸ்லீமான் கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!

இன்னும் கொள்கை ,மத்கப் வெறிகளை எரிந்து விட்டு ஒரு நாடு நிலையான
போக்கை பின் பற்றலாமே நபி அவர்களின் பொன் மொழிகளை சற்று நோக்குவோம் 

6934. யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், 'காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
Volume :7 Book :88

2486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :௪௭

25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

எனவே நாம் ஒரு சில ஹதீத்களை மாத்திரம் ஆராய்ந்து பார்க்காமல் சற்று நிதானமாக சிந்திப்போம். 


Saturday 7 May 2011

விருந்தோம்பலும் ஒழுங்கும்

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வி(ன் இறுதிப் பகுதியி)ல் பத்தாண்டு காலம் நான் அவர்களுக்குச் சேவகம் செய்தேன். பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்ளில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். அது குறித்து உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் என்னிடம் கேட்டு(த் தெரிந்து) உள்ளார்கள்.
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணந்து தாம்பத்திய உறவைத் தொடங்கிய சந்தர்ப்பத்தில்தான் (இந்த வசனம்) ஆரம்பமாக அருளப்பெற்றது. நபி(ஸல்) அவர்கள் ஸைனபின் மணாளராக இருந்தபோது (வலீமா - மணவிருந்துக்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அரும்லேயே நீண்ட நேரம் இருந்தனர். அவர்கள் வெறியேறட்டும் என்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நானும் அவர்களுடன் வெளியேறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடக்க, நானும் அவர்களுடன் நடந்தேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். பிறகு அக்குழுவினர் வெளியேறிப்பார்கள் என்று எண்ணியவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸைனப் அவர்களின் இல்லத்திற்குத்) திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். ஸைனப்(ரலி) அவர்களிடம் வந்தபோது அந்தக் குழுவினர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மீண்டும்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். (இப்போதும்) ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அந்தக் குழுவினர் வெளியேறிச் சென்று விட்டிருந்தனர். அப்போதுதான் பர்தா தொடர்பான (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம் அருளப்பெற்றது. உடனே எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் திரையிட்டார்கள்.14 

(6238 Al-bughari)
Volume :6 Book :79



மற்றுமொரு  அறிவிப்பில். 
நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்கள் வந்து (வலீமா - மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்குத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. இதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றபோது மக்களில் சிலரும் எழுந்து சென்றனர். மற்றவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (வெளியில் சென்றுவிட்டு) நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைய வந்தபோது அந்தச் சில பேர் (அப்போதும்) அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவர்களும் எழுந்து நடந்தார்கள். (மீண்டும் வெளியில் சென்றிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நான் (சென்று அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டதைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். (அவர்களுடன்) நானும் நுழையப் போனேன். அப்போதுதான் எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் (ஹிஜாப்) திரையிட்டார்கள்.
மேலும், உயர்ந்தவனான அல்லாஹ் 'இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
'விருந்தளிப்பவர் (அவையிலிருந்து) எழுவதற்கும் வெளியே செல்வதற்கும் விருந்தாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என்றும், 'விருந்தாளிகள் எழுந்து செல்லட்டும் என்ற நோக்கில் தாம் எழுந்து போகத் தயாராவது போல் காட்டலாம்' என்றும் இந்த ஹதீஸிலிருந்து (நமக்கு) மார்க்கச் சட்டம் கிடைக்கிறது.