Tuesday 27 August 2013

மனிதம் பூத்த புனித பூமியினிலே…!

இஸ்லாமிய சாம்ராஜிய வரலாறு வெறுமனே  ஒரு வார்த்தையால் சுருங்கக் கூறி முடிக்க முடியாத,அது பல தியாகம்,இழப்பு,போராட்டம்,சகிப்பு போன்ற முழு அகிம்சையுடனான வரலாற்றுடன் லித்தோங்கிய ஒரு சாம்ராஜியம்.

உலகெங்கும் இஸ்லாம் வேகமாக பரவிய காலம் குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் ' இஸ்லாமிய  பொற்காலம்' என அழைக்கப்படுகின்ற,இந்த காலத்தில் இஸ்லாம்  கலை ,மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்ததுதுருக்கியின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

"உமையா" என்ற பெயர் முதலாம் உமையா கலீபாவின் முப்பாட்டனாரானஉமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் என்பவரது பெயரிலிருந்து தோன்றியது. உமையாப் பரம்பரையின் தொடக்கம்மக்காவாக இருந்தபோதிலும் திமிஷ்கு (சிரியா ) உமையா கிலாபத்தின் தலைநகராக விளங்கியது.முஆவிய டமஸ்கஸை அழகானதொரு நகரமாக மாற்றினார். மேலும் இஸ்லாமிய பேரரசின் எல்லைகளை ஒரு கட்டத்தில் கொன்ஸ்தாந்திநோபிள் வரைக்கும் விரிவுபடுத்தினார்.

மாத்திரமல்லாமல் எகிப்து மூஸா (அலை) , யூஸஃப் (அலை) இப்ராஹிம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) போன்றவர்களை ஈன்றதும் இப்புனித பூமியே..!

ல் குர்ஆனில் எகிப்து பற்றி இவ்வாறு சான்று பகிர்கிறது (யூஸுஃபை) எகிப்து நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள் (12:21)

அன்றியும் ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில் நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது. புதியகற்காலத்தில் மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும் பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தனபாடேரியப் பண்பாடும் தொடராக உருவான நக்காடாப் பண்பாடுகளும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. ஒரே காலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

பின்னர்   இரண்டாம் வலீத் எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆபிரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் கார்தேஜ் ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.  இவ்வாறு இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பல வரலாற்றுக் கதைகளும்,சிறப்பும் இப் புனித பூமிக்கும் இல்லாமலில்லை.

இவ்வாறு புனித வரலாறுகளும்,சிறப்புகளும் கொண்ட எம் புனிதர்களின் கால்தடங்கள் பதிந்த புனித மண்ணில் ஜனநாயகமற்ற,வீண் படு கொலைகளைப் பார்க்கும் போது நெஞ்சம் ஒரு போதும் சகிக்க முடியவில்லையே…! காலமது வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்.


அவர்கள் அரேபியர்கள்தானே என்று நாம் செவ்வனே செவி மடுக்காமல் இருக்கவும் முடியாது ஏனெனில் இலங்கை முஸ்லிம்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பந்தம்,உறவு இன்று நேற்று உண்டாணதல்ல.அது பல நூற்றாண்டுகள் கொண்டது.அன்றைய அரேபிய வார்த்தகர்களான அரபி பாஷா (எகிப்து-கண்டியில் இன்னும் அவரது வீடு பாதுகாப்பாக இருக்கிறது ) நபி (ஸல்) அவர்களுக்கு முன்பதாகவே பாவா ஆதம் மழைக்கு யாத்திரிககர்கள் வந்து சென்றமை பல வரலாற்று ஆசிரியர்கள் பதிந்துள்ளார்கள் அதன் பின்பு  இப்னு பதுதா போன்றவர்களின் இலங்கை வருகை மேலும்  எமக்கு வரலாற்று சான்று.  இவ்வருகை மூலம்  கூட நமது வழித் தோன்றாலாக இருக்கலாம்.

 மாத்திரமன்றி சிறியாவின் அளப்போ என்ற பகுதியில்இருந்து வந்த வார்த்தகர்களின் வம்ச வழியாக கூட நாம் இருக்கலாம்,இன்னும் பல மறைக்கப்பட்ட  வரலாறுகள் இருப்பினும், மனிதப் படுகுலியாகும் புனித பூமிக்காக வேண்டி (எகிப்து,சிரியாநாம் ஆகக் குறைந்த பட்சம் ஒரு வேலை பிரார்த்தனையாவது செய்யலாமே, இப்படியான எம் சங்கிலித் தொடர் உறவுக்காக ஒரு நிமிடமேனும் மனம் வருந்திவதில் தவறில்லயே. வாருங்கள் ஒருமித்த குரலில் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க ஓசை கொடுப்போம்.

இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் வெகுவாகவும்,வேகமாகவும் பறந்து பரவி வருகின்றமையும் இஸ்லாமிய கிலாஃபத் மீண்டும் உயிர்பிக்குமோ என்ற பீதியாகக் கூட இருக்கலாம் இந்த மனிதப் படுகொலையின் பின்னணியும் சூட்சியும். அரேபியர்களும் விழித்த்திருந்தும் தூங்குகின்றார்களோ..! கேட்பார்,பார்ப்பார் இல்லா இந்த பூமி இன்னும்  பல  வரலாறு படைக்கட்டும் என்று கைகட்டி நிட்கிறார்களோ ..!

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள் என்றும் கூறினார்
(12:99)

அல்லாஹ் நாடினால் எகிப்தினுள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள் என்ற குரான் வசனம் சாந்தியையும்,ஓற்றுமயையும், அமைதியையும்  எடுத்துச் சொல்கிறதது ஆனாலும் அதற்கு மாறாக இன்று பீதியாகவும்,கொடூரமகவும் இருப்பதை பார்க்கும்போது சொல்லில்லடங்கா..

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நபிமார்களின் கால் சுவடுகள் பட்ட புனித மண்ணில் இரத்த சுவடுகளை காணும் போது கண்கள் கலங்குகின்றன  இப்புனிதங்கள் பூத்த புனித பூமியினிலே பூப்பரிக்க ஆயுதம் தேவைதானா..?

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்என்று வெறுதே இருக்காமல் உலக முஸ்லிம் தலைவர்களே தேடுங்கள் ஒரு   பொறி முறையை அல்லது வழி முறையை ,வேண்டாமே இனியும் மனிதப் படு கொலை  இந்த புனிதம் பூத்த பூமியினிலே…!


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)  ஒரு ஒற்றுமைப்பாட்டுடனான இராஜதந்திர தீர்க்கமான முடிவை எதுக்கும் என்ற அவாவுடனும்,துவாவுடனும் இம்மனிதம் பரஸ்பர,சுதந்திர சொற்ப வாழ்க்கையேனும் வாழ வழி வகுத்ததுக் கொடுக்கட்டும் , யா  அல்லாஹ் ஆனாலும் முடியவில்லை எழுதி முற்றுப்புள்ளி  வைக்க....!










Monday 26 August 2013

தர்க்க மேடையும் கறையான் புத்தாகும் எம் உள்ளங்களும்..!

தர்க்கம் என்பது வாக்குவாதம்விவாதம்; வாய்ச் சண்டை;  சம்பாஷணை, பேச்சுச் சண்டை என பொருள் படும் ,இன்று இது நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா ,பொய்யா? என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில் வெல்லவேண்டும் என்பதில் மட்டும் குறிக்கோளாக இருப்பதால் உண்மை பொய்யை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை  என்பது தான் உண்மை. ர்க்கித்தல்வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல் என்பன மனித இயல்புகளில் உள்ளதாகும். ஆனால் எடுத்ததற்கெல்லாம்எது விசயமானாலும் தர்க்கம் செய்யும் இயல்பு கொண்டவனாக ஒருவன்குறிப்பாக ஒரு முஸ்லிம் இருக்கலாகாது.

இந்த விஷயத்தில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்று உள்ளது. ஒருவர் தன் மனதளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப் படுத்திக் கொள்கிறார்,அதனால் அந்த விவாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சியுருவதால், சம நோக்கில் எந்த விதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார்.


இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம்,எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். (18:54)

பொதுவாக எம்மிடத்தில் அற்ப விடயங்கலாயினும்  சரியே தான் கூறியதே சரி என்று நிறுவுவதற்கு அவர்கள் ஆடும் ஆட்டமும்,பாட்டமும் சொல்லிலடங்கா..! அது மிதமிஞ்சி இஸ்லாத்திலும் ஊடுருவி ஒவ்வொருவருக்கென தனித்துவ யாப்புக்கள் இயற்றுமளவுக்கு சென்றுவிட்டாதென்றால் அது பொய்யாகாது, அதே நேரம் தர்க்கத்தில் ஈடுபடுவது உள்ளத்துடன் தொடர்புபட்ட சீர்கேடுகள் அனைத்திற்கும் ஆணிவேராக அமைந்து காணப்படுகிறது.


அதுவே, இன்று மனிதன் தான் மாத்திரம்தான்  சரி என்று தான் கூற்றை நிரூபிக்க பல நூட்களை பிரட்டுகின்றான் அவனுக்கு இப்படி சொல்லமுடியாமல் போவது ஏனோ 'நானும்  சரியே நீயும் சரியே' ஆதலால் நாம் சரியே..!
''நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)


வீண் தர்க்கங்களும்,விவாதங்களும் நம் சமகால சமூக நலனுக்கு ஓர் ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை எனினும் நாம் பாரியதொரு இக்கட்டான சமூகம் பிழவு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இருக்கின்றோம் முக நூட்களிலும்,அக நூட்களிலும் ஆரோக்கியமற்ற விமர்ஷ்னங்களை பகிரங்கப் படுத்தாமல் ஒலுங்கு முறைப்படி கருத்துக் கலத்தில் காலடி வைப்போமே..!

''தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மதீ)
அதன் பெயர் தர்க்கம். அதைத் தொட்டால் பெரிதாகிக் கொண்டே செல்லும். பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் இருக்கும் இடமே தெரியாமல் சுருங்கி விடும்மாத்திரமன்றி எமக்கு இஸ்லாம் அழகான வழி முறைகலயும்,விதி முறைகளியும் காட்டித் தந்திருக்குன்றது ஒரு கனம் சிந்தித்தால் திண்ணமாக ஐக்கிய  பொதி ஒன்றை  பரிசாக நம் நாளை இலங்கை முஸ்லிம்களுக்கு கொடுக்கலாம்.

நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதீ)
நாம் ஒன்றும் அன்றைய இருள் படிந்த காலப்பகுதியில்  இல்லை மாறாக சகல போதிய ஆற்றலும் ,அறிவும்,நவ நாகரீகமும் கொண்டிருக்கின்ற ஒரு அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை போன்ற  இன்னோரன்ன விடயங்களை ஆராயக்கூடிய ஒரு காலத்தில் இருக்கின்றோம்.
‘’உன் வழிகளெங்கும்  தூண்டில்கள் விழித்திருக்கலாம்  நீந்த முடியாதபடி  வலைகள் விரித்திருக்கலாம்  தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்  தங்கமீனாய்  தான் இருப்பேனென  தர்க்கம் செய்யாதே!’’

அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நாவு ,இரு காதுகளை படைத்திருக்க ஏன் அவன் இரு நாவால் பேசி  ஒரு காதலும் கேட்கின்றானோ...! நம் இலங்கையில்  ஒரு முஸ்லிம்  சமூக கூட்டமைப்புக்காகவும்,ஒரு மஜ்லிஸ் சூராவுக்காகவும்,பரஸ்பர ஐக்கியத்திற்ககாகவும் குரல் கொடுக்கும் இத் தருனத்தில் வேண்டாமே வீண் தர்க்கமும்,குதர்க்கமும்..!