தர்க்கம் என்பது வாக்குவாதம்; விவாதம்;
வாய்ச் சண்டை; சம்பாஷணை, பேச்சுச் சண்டை என பொருள் படும் ,இன்று இது நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா ,பொய்யா?
என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில் வெல்லவேண்டும் என்பதில் மட்டும் குறிக்கோளாக இருப்பதால் உண்மை பொய்யை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பது தான் உண்மை. தர்க்கித்தல், வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல் என்பன மனித இயல்புகளில் உள்ளதாகும். ஆனால் எடுத்ததற்கெல்லாம், எது விசயமானாலும் தர்க்கம் செய்யும் இயல்பு கொண்டவனாக ஒருவன், குறிப்பாக ஒரு முஸ்லிம் இருக்கலாகாது.
இந்த விஷயத்தில் உளவியல் சார்ந்த உண்மை
ஒன்று உள்ளது. ஒருவர் தன் மனதளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே
(தற்குறிப்பேற்றி) உருவகப் படுத்திக் கொள்கிறார்,அதனால் அந்த விவாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து
வாதாடினால், அவர் தன்னையே
எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள்
எழுச்சியுருவதால், சம நோக்கில் எந்த
விதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார்.
இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம்,எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். (18:54)
பொதுவாக எம்மிடத்தில் அற்ப விடயங்கலாயினும் சரியே தான் கூறியதே சரி என்று நிறுவுவதற்கு அவர்கள் ஆடும் ஆட்டமும்,பாட்டமும் சொல்லிலடங்கா..! அது மிதமிஞ்சி இஸ்லாத்திலும் ஊடுருவி ஒவ்வொருவருக்கென தனித்துவ யாப்புக்கள் இயற்றுமளவுக்கு சென்றுவிட்டாதென்றால் அது பொய்யாகாது, அதே நேரம் தர்க்கத்தில் ஈடுபடுவது உள்ளத்துடன் தொடர்புபட்ட சீர்கேடுகள் அனைத்திற்கும் ஆணிவேராக அமைந்து காணப்படுகிறது.
அதுவே, இன்று மனிதன் தான் மாத்திரம்தான் சரி என்று தான் கூற்றை நிரூபிக்க பல நூட்களை பிரட்டுகின்றான் அவனுக்கு இப்படி சொல்லமுடியாமல் போவது ஏனோ 'நானும்
சரியே நீயும் சரியே' ஆதலால் நாம் சரியே..!
''நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)
வீண் தர்க்கங்களும்,விவாதங்களும் நம் சமகால சமூக நலனுக்கு ஓர் ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை எனினும் நாம் பாரியதொரு இக்கட்டான சமூகம் பிழவு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இருக்கின்றோம் முக நூட்களிலும்,அக நூட்களிலும் ஆரோக்கியமற்ற விமர்ஷ்னங்களை பகிரங்கப் படுத்தாமல் ஒலுங்கு முறைப்படி கருத்துக் கலத்தில் காலடி வைப்போமே..!
''தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மதீ)
அதன் பெயர் தர்க்கம். அதைத் தொட்டால் பெரிதாகிக் கொண்டே செல்லும். பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் இருக்கும் இடமே தெரியாமல் சுருங்கி விடும்’ மாத்திரமன்றி எமக்கு இஸ்லாம் அழகான வழி முறைகலயும்,விதி முறைகளியும் காட்டித் தந்திருக்குன்றது ஒரு கனம் சிந்தித்தால் திண்ணமாக ஐக்கிய பொதி ஒன்றை
பரிசாக நம் நாளை இலங்கை முஸ்லிம்களுக்கு கொடுக்கலாம்.
நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதீ)
நாம் ஒன்றும் அன்றைய இருள் படிந்த காலப்பகுதியில் இல்லை மாறாக சகல போதிய ஆற்றலும் ,அறிவும்,நவ நாகரீகமும் கொண்டிருக்கின்ற ஒரு அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை போன்ற இன்னோரன்ன விடயங்களை ஆராயக்கூடிய ஒரு காலத்தில் இருக்கின்றோம்.
‘’உன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழித்திருக்கலாம் நீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம் தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள் தங்கமீனாய் தான் இருப்பேனென தர்க்கம் செய்யாதே!’’
அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நாவு ,இரு காதுகளை படைத்திருக்க ஏன் அவன் இரு நாவால் பேசி ஒரு காதலும் கேட்கின்றானோ...! நம் இலங்கையில் ஒரு முஸ்லிம் சமூக கூட்டமைப்புக்காகவும்,ஒரு மஜ்லிஸ் சூராவுக்காகவும்,பரஸ்பர ஐக்கியத்திற்ககாகவும் குரல் கொடுக்கும் இத் தருனத்தில் வேண்டாமே வீண் தர்க்கமும்,குதர்க்கமும்..!
No comments:
Post a Comment