Sunday 29 March 2020

மனிதம் சிக்கிக் கொள்ளும் வர்த்தக போர் !



மனிதம் சிக்கிக் கொள்ளும் வர்த்தக போர் !

இன்று நேற்றல்ல வரலாறு நெடுகிலும் தொற்று நோய்கள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஹிஜ்ரி 18-ம் ஆண்டு சிரிய நாட்டில் ஏற்பட்ட அமவாஸ்என்ற கொள்ளை நோயில் 30 ஆயிரம் பேர் இறந்தனர். அமவாஸ் என்பது பைத்துல் முகத்தஸுக்கும் ரம்லாவுகும் இடையே உள்ள ஒரு கிராமத்தின் பெயராகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காசநோய் பெரும் கொள்ளை நோயாக இருந்தது. 2002-ம் ஆண்டு சார்ஸ்நோய் உலகெங்கும் பரவி பெரும் பீதியைக் கிளப்பியது. 2012-ம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் மெர்ஸ்எனும் கொள்ளை நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.

ஆக ஏதோ ஒரு பெயரில் கொள்ளை நோய்கள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கின்றது. நாம்தான் அதற்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டி ஏற்படுத்துகின்றோம். கொள்ளை நோய் பரவினால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நட வடிக்கை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?

உமர் (ரலி) அவர்கள் மக்களின் நிலையை ஆராய்வதற்காக சிரியா நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்ஃக் எனும் இடத்தை அடைந்தபோது மாகாணப் படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர் களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து சிரிய நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “ஆரம்பகால முஹாஜிர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்என்று சொல்ல, அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். சிரியா நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ள காரணத்தால் அங்கு போகலாமா? அல்லது மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா?” என்று ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவர்களில் சிலர், “நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லைஎன்று சொன்னார்கள். வேறு சிலர், “உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லைஎன்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மதீனாவாசி களான அன்சாரிகளை அழைத்து வாருங்கள்என்று சொல்ல, அவ்வாறு அழைத்து வரப்பட்டது. அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்கள் வழி யிலேயே சென்று அவர்களைப் போன்ற கருத்து வேறுபாடு கொண்டார்கள்.

அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்என்று சொல்ல, அவ்வாறே அழைத்து வரப்பட்டது.

அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் அனைவரும், “மக்களுடன் நீங்கள் திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்என்றனர்.

ஆகவே உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே, “நான் காலையில் என் வாகனத்தில் மதீனா புறப்படவிருக்கின்றேன். நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா ஊர் திரும்புகின்றீர்?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், “அபூஉபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். ஆம், நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப் படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக அவ்வூரைவிட்டு வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான் கேட்டேன் என்று சொன்னார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள், (தமது முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

கொள்ளை நோய் பரவுவதைத் தடுப்பதற்காக இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான். அதே சமயம் இஸ்லாம் மனிதர்களிடையே உருவாக்க விரும்பும் தூய்மை, சுத்தம், ஒழுக்க விழுமங்கள், நல்ல உணவு முறைகள், ஆரோக்கியகரமான முன்னேற்பாடுகள், மன நிம்மதி தரும் வணக்க வழிபாடுகள் ஆகிய அனைத்தும் மனிதர்களுடைய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆக பலரின் ஆலோசனைக்கு பிறகு ஒரு கட்டுப்படும் முறைமைக்கு வருகின்றார்கள் இது போதும் இலங்கை போன்ற நாட்டில் முஸ்லிமாக வாழும் நம் சட்ட ஒழுங்கை கடை பிடிக்க ..!

பலவிதமான நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உளுஎனும் அங்கசுத்தி, பல்வேறு ரூபங்களில் உதவிகரமாக அமைகிறது என்பதையே இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். கொள்ளை நோய் பரவாமல் தடுக்க இன்றைய மருத்துவ உலகம் அனைத்துக்கும் முதலாவதாக தூய்மையையே பரிந்துரை செய்கிறது. அதுவும் தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதை வலியுறுத்துகிறது. தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதையே இஸ்லாம் உளுஎன்ற பெயரில் அழைக்கிறது.

புத்தகத்தின் மாரு பக்கத்தை புரட்டினால் இது ஒருவிதமான மருத்துவ யுத்தம் (BIO WAR) என்று கூட என்ன தோன்றுகிறது
மருந்து மாபியா OR மருத்துவ யுத்தம் ஒரு உணவுப்பொருளோ, வீட்டு உபயோகப்பொருளோ,ஆடைகளோ, வாகன உதிரி பாகங்களோ எதுவாக இருந்தாலும் அதைத் தயாரிக்கும் முறை கண்டிப்பாக உண்டு. அதாவது உற்பத்தி செய்யும் முறை ,பின் உற்பத்தி ஆன பொருளின் செயல் திறன் , அதன் பின்பு பொருளின் தரக்கட்டுப்பாடு , இறுதியாக அந்தந்த பொருட்களுக்கு ஏற்றவாறு இருக்கும் அரசு துறைகளின் அனுமதி பெறவேண்டும் இது எல்லாம் இருந்தால்தான் அது சந்தைக்கு அனுப்ப்ப்படுகிறது, விற்பனையாகிறது
 .
அப்படித்தான் ஒவ்வொரு மருந்தும் ,மாத்திரையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது எவ்வாறு என்று கொஞ்சம் அலசுவோம். bio war மிக அற்புதமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.பொதுவாக நிறுவனம் புதிதாக ஒரு மருந்து கண்டுபிடிக்கிறது என்றால் நான்கு விதமான சோதனை நடத்துவார்கள்.

1 . ஒரு மருந்தின் செயல் திறன் , எவ்வளவு நேரத்தில் உடலில் தங்கும் , குறிப்பிட்ட கிருமிகளைக் கொல்ல எவ்வளவு நாள் எடுத்துக் கொள்கிறது , எவ்வாறு வெளி யேறுகிறது என அவர்களின் சோதனைக்கூடத்தில் நடக்கும்
.
2 . சோதனை முயற்சிக்காக , புதிதாக்க் கண்டுபபிடித்த மருந்தை முதலில் விலங்குகளுக்கு செலுத்துவார்கள். (விலங்குகள் என்றால் எலி,பூனை,குரங்கு முதலியன .

3 . மனித எலிகள் பொருட்களை நேசிக்கும் மனிதனைப் பயன்படுத்துவதிலே குறியாக இருக்கிறார்கள் ,
இதில் தனி மனிதன்,குடும்பம் நாடு என்று சிக்கிக் கொள்ளவே செய்கின்றது

அதே போல் மற்ற பக்கத்தை புரட்டினால் இது ஒரு வித வல்லரசு ,வர்த்தக போட்டியாக (Economic War) கூட பார்க்கலாம் இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் .
ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில்.
சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. 
அமெரிக்காவின் பலம் அதன் மத்திய வங்கி ( US Federal Reserve) . அது தும்மினால் உலகமே காய்ச்சல் பிடித்து தவிக்கும். அதன் வட்டி வீதம் அதன் மாற்றம் உலக பொருளாதாரத்தையே தன்னுள் வைத்துள்ளது. அவ்வாறான  வங்கி விற்கும் பண முறிவுகளை ( US Treasury) அது பொருளாதாரா ரீதியாக 2009இல் தடுமாறிய பொழுது சீன நாடு அவற்றை வாங்கியது. சீனாவின் அறிவு சார்ந்த இந்த நடவடிக்கையை எடுத்தது - சீன மத்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் மூலம் பல த்ரிலியன்கள் அமெரிக்க டாலர்கள் பெறுமதியை சீன அரசு கொண்டுள்ளது. 
 ,வர்த்தக யுத்தம் இறக்குமதிக்குத் தடைவிதிப்பதன் மூலம் மற்ற நாடுகளின் வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைச் சில நாடுகள் வர்த்தக யுத்தம் என்ற பெயரில் செய்து வருகின்றன. அறிவுசார் சொத்துகளைத் திருடியதற்காகச் சீனா
மற்றும் பிற பொருளாதாரங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் டிரம்பின் செயல்பாடுகள், வர்த்தகப் போரின் மீதான பயத்தை மேலும் கூட்டியுள்ளன.

டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள், சீனா பொருட்களின் மீது 60பில்லியன் டாலர் வரிவிதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பொருட்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க நிர்வாகத் துறை அப்பட்டியலை வெளியிட்டு 30 நாட்களுக்குப் பின்பு வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 3மில்லியன் டாலர் அளவில் வரிவிதித்துள ளது. சீன தூதர் கூறுகையில், எங்களிடம் வாலாட்ட நினைத்தால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு கை பார்த்துவிடுவோம் என்கிறார். தற்போது, உலோகத்திற்கான வரியின் மீதான விலக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவும் இதுபோன்று உலோகங்களின் மீதான சலுகையை எதிர்பார்க்கிறது.


பங்குசந்தையில் அதிக விற்பனை வர்த்தகப் போரின் பயத்தில் உலகளவில் பங்குசந்தைகள் பெரும்விற்பனையுடன் முடித்துள்ளது, ஆசிய பங்குசந்தைகள் பெரும் விற்பனையுடன் டோவ்ஜோன்ஸ் தொழில் சராசரி 3% வீழச்சியடைந்தது. மற்ற சந்தைகளைப் போல ஐப்பானின் நிக்கி மோசமான அடி வாங்கியுள்ளது. இந்த வர்த்தகப் போரின் பாதிப்புகளில் இந்திய பங்குசந்தையும் தப்பவில்லை. நிப்டி வீழ்ச்சியடைந்து 10000 என்ற அளவைத் தொட்டு , 23மார்ச் 2018 முடிவில் 9998 என இருந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் அளவிற்குச் சரிந்தது, இப்படியான போட்டிக்குள் மனிதம் சிக்கிக் கொள்ளும்.

மொத்தத்தில் இது ஒரு சோதனை என்பதையும் இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' - ஒரு தீமையைப் புரிகின்றவர் அதற்குரிய தண்டனை வழங்கப்பெறுவார். (4:123)

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

ஆக அல்லாஹ் அவ்வப்போது மனித வர்க்கத்தை பல விதங்களில் சோதனை செய்வான் ,ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு நபி மார்களை வைத்து சோதித்தான்


No comments:

Post a Comment