Thursday, 26 May 2011

இஸ்லாமும் இயற்கை கோட்பாடும்



தவ்ஹீத் التوحيد  -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- جماعة التبليغ  என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி جماعة الاسلامي  என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் جماعة المسلمين  என்பதன் பொருள் முஸ்லிமான  கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா مذهب சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!
மேல் கூறிய அனைத்து அம்சங்களும் ஒவ்வொரு முஸ்லிம்களிடமும் இருக்க வேண்டியவை தான்   முறையே ஓர் இறைக் கொள்கை,எத்தி வைத்தல்,இஸ்லாமிய கூட்டமைப்பு இதுவல்லாத இன்னும் எத்தனையோ விடயங்கள் இருந்தும் ஏன் ஓரிரு விடயங்களுக்காக மாத்திரம் சண்டை,பிழவு பிடிக்க வேண்டும் ...! 

அல்லாஹ்வின் கயிற்றை  (அல்-குர்ஆன் ) பலமாக பற்றிப்பிடித்துக் கொள்வோம் மாறாக கொள்கை வளர வேண்டும்,கோத்திரம் வளர வேண்டும் என்ற கோட்பாடை எரிந்து விட்டு இஸ்லாம் என்ற ஓர் இறைக் கொள்கையை வளர்ப்போமே..! இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ஞாபகம் ஊட்டுவதன் மூலம் பிரயோசனம் பெற வேண்டும் எனற கூற்றுக்கேட்ப மாத்திரம் என்று எடுத்துக் கொள்ளவும் .
கீழ் காட்டும் ஹதீத் நல்ல ஒரு எடுத்துக் காட்டாகும்:
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (
ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள். 
by:Zuhair Ali




1 comment:

  1. Really it is fantastic job.....it will be cearful massage for who are unknown about the true islamic fundamental stuff.

    Goahead ...May allah grace u on this way


    Regards,
    Farwin Binth Rahmathullah.

    ReplyDelete