Friday, 13 May 2011

மத்கப் வெறி

தவ்ஹீத் -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் என்பதன் பொருள் முஸ்லீமான் கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!

இன்னும் கொள்கை ,மத்கப் வெறிகளை எரிந்து விட்டு ஒரு நாடு நிலையான
போக்கை பின் பற்றலாமே நபி அவர்களின் பொன் மொழிகளை சற்று நோக்குவோம் 

6934. யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், 'காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
Volume :7 Book :88

2486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :௪௭

25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

எனவே நாம் ஒரு சில ஹதீத்களை மாத்திரம் ஆராய்ந்து பார்க்காமல் சற்று நிதானமாக சிந்திப்போம். 


No comments:

Post a Comment