Sunday, 24 April 2011


இஸ்லாத்தின் எளிமை,அதன் அறிவுபூர்வமான    
  நடைமுறைக்கேற்ற அமைப்பு


     இஸ்லாம் புராணங்கள்,கட்டு கதைகள் ஏதுமில்லாத ஒரு நெறியாகும்.அதன்அறிவுரைகள் எளிதானவையும் எளிதில் புரிந்துகொள்ளத்
 தக்கவையுமாகும்.அது எவ்வித மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத   நம்பிக்கைகளையும் விட்டுதூய்மையானதாகும்.இஸ்லாத்தில் மதகுருமார்களின் ஆதிக்கம் கிடையாது.நடைமுறை வாழ்வுக்கும் மனிதத்தேவைகளுக்கும் தொடர்பில்லாத வெற்று தத்துவங்களுக்கும் பயனற்ற சடங்குகளுக்கும் அதில் இடமில்லை.புரிந்துகொள்ள முடியாத  சிக்கலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அதில் இல்லை.ஒவ்வொரு மனிதனும் இறைவனின் திருமறையை  நேரடியாக  அணுகி அதன் வழிகாட்டுதலில் இருந்து பயனடைய முடியும்.                                                                                                                                                                                                 இஸ்லாம் மனிதனின் பகுத்தறியும்  ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றது.அவனை தனது அறிவாற்றலைப்பயன்படுத்தும்படி தூண்டுகின்றதுஎந்த ஒரு விஷயத்தையும் அதன் எதார்த்த நிலையின் வெளிச்சத்தில்,அதன் விரிவான பின்னணியில் பார்க்கும்படி  சிந்திக்கும்படி கட்டளையிடுகின்றது."என் இறைவா என் அறிவை அதிகப்படுத்தியருள் "(20௦:114)என்று பிராத்திக்கும்படி மனிதனுக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது."அறிவில்லாதவர்கள்,அரிவுடையோர்க்குச் சமமாக மாட்டார்கள்"(39:9)என்று அது அழுத்தந்த்திருத்தமாகக் கூறுகின்றது.சிந்திக்க மறுப்பவர்களை "மிருகங்களைப் போன்றவர்கள் ;ஏன் அவற்றை விடவும் தாழ்ந்தவர்கள் "(7:179)என்று இடித்துரைக்கிறது.             

No comments:

Post a Comment