Saturday, 16 April 2011

கலிபாக்கள் எழுச்சி

முகம்மது நபி இறந்தபொழுது அவரது ஆட்சியின் கீழ் மொத்த அரேபிய தீபகற்பமும் இருந்தது. அதற்கு அவருக்கு பிறகு அதை ஆளுவதற்க்கு அபூபக்கர் (ரலி) எனபவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு பிறகு உமர் (ரலி)உசுமான் (ரலி)மற்றும் அலீ (ரலி) ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்கள் நால்வரும் றாசுதீன் கலிபாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு பிறகு உமய்யா கலிபாக்கள் மற்றும் அப்பாசிய கலிபாக்கள் ஆகியோர் இஸ்லாமிய  பேரரசை உலகில் விரிவுப்படுத்தினர். இவர்களின் ஆட்சியின் கீழ் அரேபிய தீபகர்ப்பம், வடக்கு மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, ஆப்கானிசுத்தான், சிந்து மற்றும் போர்ச்சுக்கல்எசுப்பானியா ஆகிய பகுதிகள் வந்தன. இந்த பகுதிகளில் எல்லாம் இஸ்லாம்  வேகமாக பரவியது. குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் 'இஸ்லாமின் பொற்காலம்' என அழைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது. துருக்கியின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment