Monday, 13 June 2011

எமது கோட்பாடும் அதன் வளர்ச்சியும்



by Zuhair Ali on Wednesday, 08 June 2011 at 11:07

இஸ்லாம் கட்டுக்கதைகள்,புராணக்கதைகள் இல்லாத ஒரு எளிதான அல்குர்ரன் ,ஹதீத் அதன் அறிவுரைகள் சார்ந்த ஓர் ஒப்பற்ற நெறியாகும் தொன்று தொட்டு ஒரே குறிக்கோளான இஸ்லாமும் அதன் கோட்பாடும் ஒன்றாகவே இருந்தது அதற்கான ஒரு எடுத்துகட்டக இந்த வசனத்தை நபி இப்ராகிம் (அலை) அவர்கள் பிரார்த்தித்த போதனை என்றும் நமக்குள் ஊறி இருக்க வேண்டுமே அல்லாமல் எனது கோத்திரம்,குளம் ,கோட்பாடு என்றல்லாம் வாதம், பிரதி வாதம் என்பனவற்றை எரிந்து விட்டு முஸ்லிம் என்ற நாமத்தை மொழிவோம்.


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

இந்த வசனம் முற்றிலும் உன்னை வழிபாடும்  முஸ்லிம்களாக்குவாயாக,என்பதை தெளிவாக அல்லாஹ கூறும்போது  நாம் ஏன் நமக்குள் குளம்,கோத்திரம் ,கட்சி என்றெல்லாம்  வாதிட வேண்டும் மாறாக நாம் ஒரே முஸ்லிமான  கூட்டத்தினர் அதிலும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள் நமக்கென உரித்தான நாமத்தை அன்றே பெயர் சூட்டிவிட்டார்கள் ஆக,வாருங்கள் நாம் ஒன்றாக தலைமைத்துவம்,இஸ்லாமிய ஆட்சி என்ற கோட்டையை பிடிக்க பயணம் செய்வோம் 


பொறாமை,போட்டி,வஞ்சகம் இதற்கெல்லாம் அப்பால்பட்ட இந்த புனித முஸ்லிம் என்ற கோட்பாடை ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டு செல்வோம் இன்னும் நமக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் எனினும் அவற்றை சுலோபமாக,இலகுவாக தீர்த்துக் கொள்ளலாமே ...! அல்லாஹ இவ்வாறு  



 كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُواْ فِيهِ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلاَّ ٱلَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ بَغْياً بَيْنَهُمْ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ آمَنُواْ لِمَا 
ٱخْتَلَفُواْ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِ وَٱللَّهُ يَهْدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِي

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும்
கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்,
தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப்
புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை
நேர்வழியில் செலுத்துகிறான்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. 
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது. 

ஜமாஅத்(جماعة) என்ற அரபுப் பதத்துக்கு கூட்டம் என்று பொருள்படும் புகஹாக்கள் கருத்தின் படி அவர்கள் குர்ரானையும் ,ஹதீதையும் பின்பற்றுபவர்கள் என்றும் கருத்துப்படும் ஆக அந்த கூட்டம் முஸ்லிமான நம் கூட்டம்தான் என்பது தெளிவு .

மேலும்,அல்லாஹ இன்னுமொரு இடத்தில அழகான முஸ்லிம் என்ற வார்த்தையை சொல்லும்போது:

 وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்? (41:33)

" كان الناس أمة واحدة فاختلفوا " .  

சுருங்க கூறின், நாம் சற்று நடு நிலமையாக சிந்திக்கும் போது எல்லா இடங்களிலும் முஸ்லிமான கூட்டம்,உம்மத்,ஜமாஅத் என்றே பேசப்படுகிறது மாறாக தனித்துவம்,கட்சி ,கோட்பாடு,கொள்கை என்று எங்கேயும் வலியுறித்தி  கூறப்படவில்லை என்பதுதான் திண்ணம் .

1 comment:

  1. http://www.facebook.com/photo.php?fbid=1321774019408&set=a.1321763339141.36512.1682553964&type=1&theater

    ReplyDelete